தெரு நாய்களுடன் விவாதம் செய்வது ரவூப் ஹக்கீமுக்கு நியாயமா..?
கௌரவ அமைச்சர் றஊஃப் ஹகீம் அவர்களுக்குஒரு பணிவான ஆலோசனை
அளவில்லா அருளாளனும் நிகரில்லா அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்…
தாங்கள் பொது பளு சேனா அஞ்ஞான சேரவுடன் விவாதம் செய்வதற்குத் தயார் என்று ஒரு சிங்கள பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்ததாக ஜஃப்னா நியூஸ் இணைய தளத்தின் ஊடாக அறிந்து கொள்ள கிடைத்தது.
ஆதலால் இது தொடர்பாக எனது ஆலோசனையையும் தாங்களின் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.
தாங்கள் படிப்பில் ஒரு சட்டத்தரனி நம் சமூகத்திற்கு மத்தியில் போற்றத் தக்க ஒரு பெரும் தலைவர் அரசியல் மட்டத்தில் அமைச்சரவையின் ஒரு உயர் அமைச்சர் இவை அத்தனையையும் மறந்து விட்டு கண்ட கண்ட தெரு நாய்களுடன் எல்லாம் தாங்கள் விவாதம் செய்வது எந்த வகையில் நியாயம்? விவாதம் செய்வதற்கு ஒருதராதரம் வேண்டாமா?
இன்று நீங்கள் இந்த தரம் கெட்ட தெரு நாயுடன் விவாதிக்கச் சென்றால் உங்கள் அந்தஸ்த்து என்னாவது?
உங்கள் அறிவுக்கும் அந்தஸ்த்துக்கும் ஆளுமைக்கும் தகுதிக்கும் தரத்துக்கும் பொருத்தமான ஒருவர் அழைத்தால் கண்டிப்பாக நீங்கள் அந்த சவாலை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
அவ்வாறின்றி இப்படிப்பட்ட தரம் கெட்ட தெரு நாய்களுடன் எல்லாம் தாங்கள் விவாதம் செய்வது அறவே தேவையற்ற விடயமாகும் இதனால் உங்களுக்கோ நீங்கள் சார்ந்திருக்கும்; சமூகத்திற்கோ அல்லது உங்கள் கட்ச்சியிற்கோ எவ்வித பலனும் கிட்டப் போவதில்லை.
அவன் நம் சமூகத்தின் ஆக அடிமட்டத்தில் உள்ள அறவே படிப்பறிவற்ற ஒரு பாமர மகனுடன்கூட விவாதிப்பதற்குக் தகுதியற்றவன்.
குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் தாங்கள் பதில் சொல்லி கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீணாக்காது உங்கள் பணியைத் nதhடருங்கள்.
அவன் உங்களுடன் விவாதித்தேயாக வேண்டும் என்றால் அவனை முதலில் உங்கள் தரத்திற்கு வந்து உங்கள் அந்தஸ்த்துடன் விவாதத்திற்கு வருமாறு நீங்கள் சவால் விடுங்கள் .இதுதான் உங்கள் அந்தஸ்த்துக்குப் பொருத்தமானதாக இருக்கும் என எண்னுகின்றேன். ஆவன் உரோஷம் உள்ளவனாக இருந்தால் உங்களுக்கு இருக்கின்ற தகுதியுடனும் அந்தஸ்த்துடனும் வரட்டும்.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்.
yes you are correct brother, its not necessary to debate with foolish
ReplyDeleteDEAR MR. MUNAF... நீங்கள் சொல்வது சரிதான்... படிப்பில் சட்டத்தரனி முஸ்லீம் சமூகத்தில் போற்றத்தக்கவர் அமைச்சரவையில் உயர் அதிகாரி.... ஏற்றுக்கொள்கிறோம்.
ReplyDeleteஉண்மையில் நீங்கள் குறிப்பிட்டது போல் 'குறைக்கிற' நாய்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவை இவருக்கு கிடையாதுதான். இந்தக் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அறிவுக்கும் அந்தஸ்த்துக்கும் தகுதிக்கும் தரத்துக்கும் பொருத்தமான அதேநேரம் ஆழும் கட்சியில் அங்கம் வகிப்பவருமான இவர் ஏன் ஜனாதிபதி அவர்களுடனும் பாதுகாப்புச் செயளாலருடனும் (கோதபாய) நீங்கள் குறிப்பிடும் இந்த 'பொது பளு சேன' வின் அராஜஹத்தை எடுத்துரைத்து அவர்களை கட்டுப்படுத்துமாறும் மட்டுப்படுத்துமாறும் ஏன் எடுத்துரைக்க முடியாது? குறைந்தது எமது மக்களுக்காகவும் BBS இற்கு எதிராகவும் அதை தடைசெய்யுமாறும் பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியிடமும் முறையிட்ட 'கௌரவ' வாசுதே நானயக்கார மற்றும் டிலான் பெரேரா போன்றவர்களுக்கு நிகராக நின்று குறல் கொடுக்கட்டும்.
அப்போது பார்ப்போம் இவர் சார்ந்திருக்கும் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது....!!! அப்படி BBS இற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அது இவருக்கும் இவரது கட்சிக்கும் தமது சமூக்த்துக்கும் நிச்சயம் பயன் கிடக்கும் என்பது மட்டுமல்ல இவரின் அந்தஸ்த்தும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
அத்துடன் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தனது மௌனத்தை களைத்து ஏனைய முஸ்லீம் தலைவர்களுனான கருத்து வேறுபாடுகளை மறந்து (குறிப்பாக ரிசாத் பதியுத்தீன்) ஒன்றுபடுவதன் மூலம் ஒரு சுமுகமான தீர்வை தமது சமூகத்துக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு 'விவாதம் பன்னத்தயார்...!!! என்று மட்டும் ஊடகங்களுக்கு அறிக்கை மட்டும் விட்டால் கடமையும் பொறுப்பும் முடிந்து விடாது....!!! அப்படியானால் நாளை... 'வெள்ளம் வந்து விட்டது இப்போது அணை கட்டுங்கள்' என்ற கதை தான் நாம் படிக்கப்போகிறோம்.
எதிரியைக் கூட இழிவான வார்த்தைகள் கொண்டு பேசுவது அழகல்ல .
ReplyDeleteஇவ்வாறான கிறுக்கல்களை பிரசுரிப்பது ஒரு சிறந்த ஊடகத்துக்கு அழகல்ல.
ஆமா .. அடுத்த தேர்தல் வரும் வரை றஊப்ஹகீம் என்ன காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க போகிறார்?? இவரின் 12 வருட தலைமத்துவ ஆழுகையில் என்ன வகயான காத்திரமான நடவடிக்கை சமூகத்திற்காய் செய்தார் எனக்கேட்டால் அவரின் கைவிரல்கள் கூட மிஞ்சிப் போகும் பட்டியலிடும் முயற்சியில்....
உங்கள் வாதத்திற்கு அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவிலிருந்து ஆதாரம் தர முடியுமா தெருநாயை தெருநாய் என்று சொல்லாது என்னவென்று சொல்வது
DeleteMay be this article from assistant of Raoof Hakeem??????????? Very good points from Akram and Mujahith.
ReplyDeleteஎண்ணங்களில் அதிகமானதைத்தவிர்த்துக் கொள்ளுங்கள் சில என்னங்கள் பாபமாகும் (அல்குர்ஆன்)
Deleteஅக்ரம் நீங்கள் ரிசாத்துடன் சேர்ந்து பணீயாற்ற சொல்வது எந்த விதத்தில் நியாயம் இந்த மரத்தை எதிர்த்து நாட்டிய விதைகள்தான் இவர்கள் இவர்கலுக்கு அப்போவே நீங்கள் சொல்லும் புத்தியிருக்குமானால் இப்போ இந்த நிலை வராது தந்தை இறந்துவிட்டால் அந்த குடும்பத்தை பாதுகாப்பது அவர் பெற்றபிள்லைகளீன் கடமை ஆனால் சடங்கு முடிவதற்குல் வீட்டையே விட்டு வெலியேரிச் சென்றால் முடிவு யார் கையில் நாட்டின் ஜனாதிபதியே இபபடியான பிரட்சனைகலை கன்டும் கானாமல் இருக்கும் போது காங்ரஸ் தலைவர் அரசைவிட்டு வெளீயே வந்தால் அடுத்தகட்டம் என்ன இவரோடு முஸ்லீம்கள் வீதியில் இறங்கி போராடுவதா நிட்சயம் பொருமை வெல்லும் பொருத்திருப்போம்
ReplyDeleteசகோதரர் முனாப் சொல்வது போன்று நானும் கௌரவ ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோல். 'வேண்டாம் விவாதம் ... அந்த BBS உடன்' அது உங்களின் அந்தஸ்த்தையும் கௌரவத்தையும் பாதிக்கும். அதில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக உடனே வில்பத்து பிரதேசத்திற்கு சென்று அந்த மக்களின் உண்மை நிலையை கண்டறிந்து ஜனாதிபதியிடம் கலந்தாலோசித்து ஒரு சிறந்த முடிவை அம்மக்களுக்கு கொடுங்கள். (தேசப்பற்றை நிருபிப்பதற்காக பங்களாதேஷ; சென்ற நீங்கள் இந்த வில்பத்து மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது அரசில் முக்கிய அங்கம் வகிக்கும் உங்களுக்கு நல்லதல்ல)
ReplyDeleteமுஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சினைகளை பட்டியலிட்டு முன்னெடுத்துக் கொண்டிருக்கும் இத்தருனத்தில் உங்களைப் போன்ற தலைவர்களால் தான் அவைகளுக்கு தீர்வு தேடிக்கொடுக்க முடியும்.
கொழும்பு கிரான்பாஸில் ஒரு முறை பாகிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் போட்டியின் பின்னர் முஸ்லீம்களுக்கும் சிங்கள இன மக்களுக்கும் நடந்த வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்து அது கைகலப்பாக மாறியதால் ஒருவர் உயிரிழந்தார். அதன் பின்னர் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் உடனே அந்த இடத்துக்கு விஜயம் செய்து பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைத்ததோடு ஒரு இனக்கலவரம் வராமல் அந்த இடத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் என்பதை இது அப்பகுதி மக்கள் மறந்திருக்க முடியாது. அவ்வாரான ஒரு சேவையையே உங்களிடமும் அனைத்து முஸ்லீம் மக்கறும் எதிர்பார்க்கிறார்கள்.