பொய்சாட்சி கூறி, மனச்சாட்சியைக் கொன்ற உதயராசா
(நவாஸ் சௌபி)
ஒரு விபச்சாரியை பத்தினி என்றும்
ஒரு இனவாதியை சமாதானத் தூதுவர் என்றும்
ஒரு பயங்கரவாதியை தர்மத்தின் தலைவன் என்றும்
சிறிரெலோ உதயராசா கூறி இருக்கும் பொய் சாட்சியானது அவரது மனச்சாட்சியைக் கொன்றிருக்கிறது.
பொதுபல சேனாவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தமை தனக்கு கவலை அளித்திருப்பதாக திரு உதயராசா வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதில் முஸ்லிம்கள் மீது உதயராசா கொண்டிருக்கும் வஞ்சக வெளிப்பாடு நன்கு தெரிகிறது.
இதுவரை பல்வேறு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் பொதுபல சோன அமைப்பினர் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்திய எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் ஒரு வார்த்தையிலேனும் முஸ்லிம் சமூகத்திற்கு அனுதாபமோ ஆறுதலோ கூறுவதற்கு மனமில்லாதிருந்த உதயராசா இன்று பொதுபல சேனாவை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமைக்காக கவலை தெரிவித்திருப்பது காவி அணியாத ஒரு தீவிரவாத முகத்தை அவரில் காட்டியிருப்பதாகத் தெரிகிறது.
பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை இன்னல்படுத்திக்கொண்டிருக்கும் பொதுபல சேனாவின் செயற்பாடுகளை ஒரு சிறு பிள்ளையும் தீவிரவாத செயற்பாடாக அறிகின்ற நிலையில் பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்புக் கூட்டமைப்பு இவ்வாறான ஒரு அறிவிப்பைச் செய்ததை உதயராசாவால் ஏன் ஜீரணிக்க முடியாதிருக்கின்றது.
இன்று பொதுபல சேனா இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் எதனையும் அறியாத இரு கண்களை இழந்த குருடராகவா உதயராசா இக்கருத்தினை வெளியிட்டிருக்கிறார்? இப்படி மனச்சாட்சிக்கு விரோதமாக ஒரு பொய் சாட்சியம் சொல்லும் அளவிற்கு உதயராசாவுக்கு இலங்கை முஸ்லிம்கள் என்ன கொடுமை செய்தார்கள்?
எங்களது வீட்டுக் கூரைகள் எரிந்துகொண்டிருப்பதாக நாங்கள் அழுதுகொண்டிருக்கிறோம். அந்த நெருப்பில் உதயராசா சிகரட் பற்றவைக்க வந்திருக்கிறார். சல்கிறார். பொதுபல சேனா கோவில்களை இடித்து தமிழ் மக்கள் மீது இவ்வாறான ஒரு இனவாதத்தை மேற்கொண்டிருந்தால் அப்போது உதயராசாவுக்கு இந்தக் கவலை வந்திருக்குமா? இப்போது கூறுவது போன்றுதான் அப்போதும் பொதுபல சேனாவை ஒரு ஆண்மீக அமைப்பாகும் என்று உதயராசா வாதாடுவாரா?
விடுதலைப் போராட்டத்தில் புலிகளாலும் தமிழ் பயங்கரவாத ஆயுதக் குழுக்களாலும் முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் முதல் பொத்துவில் அறுகம்பைவரை பாதிக்கப்பட்ட இழப்புகளை உதயராசா மறந்துவிட்டாரா? சுதந்திரத்தின் பிறகும் பௌத்த தீவிரவாதத்தின் பெயரால் முஸ்லிம்கள் அழிய வேண்டும் என்று உதயராசா மனதார விரும்புகின்றாரா? அப்படி என்றால் இரண்டு பக்கமும் அடிவாங்கும் மத்தளமாகவே இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்பதை உதயராசா போன்றவர்கள் வலியுறுத்துகின்றார்களா?
ஒரு ஆண்மிக அமைப்பாக பொதுபல சேனா பௌத்தத்தை பாகதுகாக்க முயற்சிக்கிறது என்றால்? இங்கு பௌத்தத்திற்கு எதிராக இருப்பவர்கள் யார்? எந்தப் பண்சாலை முஸ்லிம்களால் தாக்கப்பட்டிருக்கிறது? எந்த தேரரை நடுவீதியில் மறித்து முஸ்லிம்கள் தாக்கியிருக்கிறார்கள்? எல்லாமே அபாண்டமான பொய்க் காரணங்களும் மிதண்டாவாதப் பிரச்சாரங்களுமே ஆகும். முஸ்லிம்களைத் தாக்குவதற்கு பௌத்தத்தைப் பாதுகாக்கும் கோஷம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டில் தானும் இணைந்திருப்பதாகவே சிறி ரெலோ அமைப்பின் செயலாளர் உதயராசாவை முஸ்லிம்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. சில காலங்களுக்கு முன்பு கல்முனைப் பிரதேசத்திற்கு பொதுபல சேனாவை அழைத்துவரும் கதைகள் காதுகளுக்கு எட்டின? ஆனால் அப்பிரதேச தமிழ் சமூகங்கள் அதனை விரும்பாதமையால் அது தடைப்பட்டது. இப்படி இனங்களுக்கிடையில் சமாதானமும் சகோதரத்துவும் நிலவ வேண்டும் என்று மக்கள் நாட்டப்படுகின்ற போது உதயராசா போன்ற தீவிரவாத மனம் படைத்தவர்கள் அதற்கு தடையாகவே இருப்பார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகவே விளங்குகிறது.
தவராசாவின..அரிக்கை தவரானதெ அவர் முஸ்லிம்கலின் பரம எதிரி என்பதை தெலிவை ஏட்படுத்துகின்ரது.
ReplyDeleteiwan ellam oru toosi
ReplyDelete