நாட்டில் மதங்களுக்கிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை - அடித்துக்கூறுகிறார் மஹிந்த
நாட்டின், மத சுதந்திரம் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சகல மதங்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலர், நாட்டின் அபிவிருத்தியை கேலிக்கு உட்படுத்தி, இல்லாத பிரச்சினையை ஏற்படுத்தி நாட்டை இன்னல்களுக்கு உட்படுத்த முயல்வதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மதங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதும், சமயங்களின் சுதந் திரங்களைப் பெற்றுக்கொடுப்பதும் எமது பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
கிராந்துரு கோட்டை மகாவலி பிரதேச பி, சீ வலயத்தில் வாழும் 5,500 பேருக்கு காணி உறுதி வழங்கும் வைபவம் மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற் கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி தனதுரையில் மேலும் கூறியதாவது;
இப்போது இல்லாத பிரச்சினைகளை புதிது புதிதாக உருவாக்கு கின்றனர். நல்லிணக்கம் பற்றிக் கூறுகின்றனர். மதங்களுக்கிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் அதை ஏற்படுத்தப் பார்க்கின்றனர். அரசியல் அமைப்பில் கூறப்பட்டவாறு எந்தவொரு பிரஜைக்கும் எந்த இடத்திலும் வாழும் உரிமை உண்டு. அதேபோன்று தமது மொழியைப் பேசும் உரிமை உண்டு, எதையும் பின் பற்றும் சுதந்திரமும் உண்டு. அத்துடன் புத்த மதத்தை அரச அனுசரணை யோடு பாதுகாக்க வேண்டும் என்று அதே அரசியல் யாப்பில் கூறப் பட்டுள்ளது. அப்போது உருவாக்கப்பட்ட அதே அரசியலமைப்புத்தான் இப்போதும் பின்பற்றப்படுகின்றது. எனவே இது தொடர்பில் எவரும் கலவரப்படத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=iCYYg9U5n4U
இது போன்ற பொய்களே ஜனாதிபதியின் எதிர்கால படுதோல்விக்கு அத்திவாரமாக நிற்கப்போகின்றது.
ReplyDeleteநீங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதைதான் ஒடைந்த டேப் ரெகோர்டெர் மாதிரி சொல்லிகிட்டே வருகிறீர்கள்,ஆனால் எதுவும் நடந்த பாடில்லை. அப்போ பொதுபல சேனாவுக்கு என்ன மதம்?அவர்கள் செய்யும் அடாவடிகளுக்கு என்ன பெயராம் உங்கள் பாசையில்?
ReplyDeleteஓனான்களின் ஊறில் களுதைகள் வித்துவாங்களே என்ற பழமொழிக்கேற்ப,உங்கள் கதைக்கும் ஆமாம் போடும் சில ஓனாங்களும் இருக்கிறார்கள்,அவர்களுக்குத்தான் இதெல்லாம் செல்லுபடியாகும்.
முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் கூறுங்கள்.
ReplyDeleteஅவர்கள் ஜெனீவா போய்க் கூறட்டும்