பேஸ்புக்கை பயன்படுத்தி இலங்கையில் சிறுநீரக மோசடி
(Tm) சிறுநீரக மோசடிக்கு முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது என்று இந்தியச்செய்தி தெரிவிக்கின்றது.
கொழும்பை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்பட்ட சிறுநீரகம் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போதே இது அம்பலத்திற்கு வந்துள்ளது.
சந்தேகநபர்களை கண்டுபிடிக்க இந்த சமூக வலைத்தள தொடர்புகள் பயன்படுத்தப்படுவதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மாரு என்பவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சையில் உயிரிழந்துள்ளார்.
எனினும் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தினேஷ் மாரூவின் மின்னஞ்சல் கணக்கை சோதனை செய்த அவரது சகோதரர் சிறுநீரக மோசடி குறித்து தகவல்களை அறிந்து கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, ஆந்திர மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்
Post a Comment