Header Ads



காணாமல் போன மலேசிய விமானம், வரலாற்றில் இடம்பிடித்தது


சென்ற மாதம் 8ம் தேதி விண்ணில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்எச்370 விமானம், தேடல் வேட்டையில் அதிக செலவு வைத்த வகையில் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் ஏர்பிரான்ஸ் விமானம் 447 தொடர்பாக இருவருட விசாரணையில் 54 மில்லியன் டாலர் தொகை செலவழிக்கப்பட்டதாம்.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தியில், மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், மலேசிய அரசு உண்மைத் தகவல்களை வேண்டுமென்றே மறைத்துவருவதாகக் கூறியுள்ளார். மயமான விமானம் குறித்து அரசு உண்மைத் தகவலைக் கூற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

அமெரிக்க கடற்படையில் இதுவரை 3.6 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கி, இடத்தைக் கண்டறியும் பிஞ்சர் லொகேட்டர் நிறுவுதல், கடல் நீரின் அடியில் தேடுதல் வேட்டை, விமான கறுப்புப் பெட்டி கண்டறிதல் உள்ளிட்டவற்றுக்கு 3.3 மில்லியன் டாலர் செலவழித்துள்ளதாம். இதில், எம்.எச்.370ஐத் தேடப் பயன்படுத்திய விமானங்கள், கப்பல்கள் உள்ளிட்டவற்றின் செலவும் அடங்குமாம்.

வியட்நாம் தன் பங்குக்கு தென் சீனக் கடலில் தேட 8 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்துள்ளது.

No comments

Powered by Blogger.