Header Ads



பொதுபலசேனாவின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான முன்னோடி நடவடிக்கை

சுமார் முப்பது வருட காலமாக நமது ஸ்ரீலங்கா தாயகத்தில் நடைபெற்று வந்த கொடூர யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் நான்கின மக்களும் இன,மத,மொழி பேதங்களை மறந்து ஓர் தாய் பிள்ளைககளாக சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வருகின்ற வேளையில் இந்நாட்டிற்கும், இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் மற்றுமொரு சாபக்கேடாக பொதுபல சேனா, ஜாதிக ஹெல உறுமய, ராவண பலய என்னும் பெயர்களைக் கொண்ட சில பேரினவாத சக்திகள் முஸ்லிம்களையும், முஸ்லிம்களின் பொருளாதாரம், கலாச்சாரம், வணக்கஸ்தலங்கள், அடிப்படை மத வழிபாட்டு உரிமைகள் போன்றவற்றையும் பகிரங்கமாகவே அடக்கியொடுக்க முற்பட்டும், சூறையாடி வருவதும் இன்று உலகறிந்த விடயமாகும்.

பொதுவாக மத்திய இலங்கையில் கண்டி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் கண்டி மாநகரமானது முஸ்லிகளின் வர்த்தகக் கேந்திர மையமாக விளங்குகின்ற ஓர் நகராகும். அப்பிரதேசத்தில் இவ்வாறான முஸ்லிம்களுக்கெதிரான ஒரு பிரேரனைக்காக ஒரு பௌத்த மதத்தைச் சேர்ந்த துறவியொருவர் தீக்குளித்து இறந்து போனால் அதனை வைத்து சிங்கள, முஸ்லிம் உறவில் ஓர் பாரிய விரிசலை ஏற்படுத்த முடியும் என்ற சிங்கள இனவாதிகளின் எதிர்பார்ப்பு அங்கே பலிக்கவில்லை. காரணம் கண்டி மாவட்டத்தில் சிங்கள, முஸ்லிம்களின் உறவுப்பாலம் தொன்று தொட்டே பலமாகக் காணப்படுகின்றமையாலும் அங்கே ஈரின மக்களும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழ்கின்ற காரணத்தாலும் இவ்வாறான சூழ்ச்சியாளர்களின் விடயத்தில் அப்பிரதேச மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.

மேலும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத் தாயகத்திலுள்ள அதிகமான பள்ளிவாயில்கள், மதரசாக்கள் மற்றும் தஃவா அமைப்புக்களின் முழு விபரங்களும் உளவுத்துறையினரால் சேகரிக்கப்பட்டமையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும். இலங்கையில் சமய, சமூக சேவைகளைச் செய்து வருகின்ற இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள், மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளுடன் கூடிய தனிநபர்கள் ஆகியோரிடம் உளவுத்துறையினரின் விசாரணைகள் மிகவும் அதிகமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக இலங்கையில் விடுதலைப் புலிகள் செயற்பட்டு வந்த காலப்பகுதியில் நாட்டின் வடக்குப் பிரதேசம் எவ்வாறானதொரு கண்கொண்டு அரசாங்கத்தினால் நோக்கப்பட்டதோ அதற்கு சற்றும் குறையாத விதத்திலேயே இன்றளவும் கிழக்கு மாகாணம் அரச பாதுகாப்புத்தரப்புக்களினாலும், உளவுத்துறையினராலும் கண்காணிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், கிண்ணியா, மூதூர், கந்தளாய் போன்ற கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற ஊர்களிலுள்ள பள்ளிவாயில்கள், மதரசாக்கள் மற்றும் தஃவா அமைப்புக்களின் வருமான விபரம், வெளிநாடுகளுடன் உள்ள தொடர்புகள், மௌலவிமார்களின் விபரங்கள் போன்றவை மிகத்துல்லியமாகக் கணிக்கப்பட்டு அதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள உலமாக்கள் மற்றும் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்ற அனைவரினதும் தகவல் சேகரிப்புகள் புலனாய்வுத் துறையினரால்  பேணப்பட்டு வருகின்றமையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

இதேநேரம் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கமைய வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டதையடுத்து அம்மாகாணத்தில் இருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து சென்று தென்னிலங்கைப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களில் கணிசமானவர்கள் தற்போது வடக்கிலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலுள்ள தமது பூர்வீகக் காணிகளுக்குச் சென்று மீள்குடியேற ஆர்வங்காட்டி வருகின்றனர்.

எனினும் பொதுபல சேனா போன்ற பௌத்த தீவிரவாத கடும்போக்காளர்கள் இப்போது வட மாகாணத்திற்கும் சென்று அங்கு முஸ்லிம்களை மீளக் குடியமர்த்தக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த பல நாட்களாக தமது சொந்த இடங்களில் மீள்குடியேற விரும்பிச் சென்றுள்ள மன்னார் மறிச்சுக்கட்டி முஸ்லிம்கள் விடயத்திலும் பொதுபலசேனா அமைப்பினர் தமது கடும்போக்குச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துள்ளனர். இவர்களின் இவ்வாறான பௌத்த போதனைக்கு விரோதமான அடாவடிச் செயற்பாடுகளைக் கண்டிப்பதற்காக மனிதாபிமானமுள்ள வடரேக விஜித தேரர் போன்ற பௌத்த மதகுருமார்களின் ஊடகவியலாளர் மாநாடுகளையும் இந்த பொதுபலசேனா கடும்போக்குவாதிகள் தமது காடைத்தனமான செயற்பாடுகளால் தடைசெய்து வருகின்றனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டிலிருந்தே முஸ்லிம்களுக்கெதிராக பேரினவாத அடக்குமுறையானது நன்கு திட்டமிட்ட முறையில் அரச ஆசீர்வாதத்துடன் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த உண்மையாகும். 'புத்த மதத்தை காப்போம். இது பௌத்தர்களின் பூமி' போன்ற பேரினவாதத்தைப் பறை சாற்றுகின்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் முச்சக்கர வண்டிகளிலும், பொதுமக்கள் நடமாடும் பஸ் நிலையம், சந்தைகள் போன்ற இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் முஸ்லிம்களுக்கெதிராக நமது இலங்கைத் தாயகத்தில் வேர் விட்டு வளர்ந்து வருகின்ற பேரினவாத அடக்குமுறைச் சம்பவங்களுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுக்களேயாகும். 

இலங்கை நாட்டில் எந்தவொரு மனிதனுக்கும் எந்தவொரு மதத்தினையும் பின்பற்றி வாழ்வதற்குரிய முழுச் சுதந்திரமும் அரசியலமைப்பு ரீதியாகவும், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்ட விடயமாகும். யாருடைய மத விவகாரங்களிலும் யாரும் இடையூறு ஏற்படுத்துவது என்பது நாட்டின் குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் பாரிய குற்றமாகும். அவ்வாறு இடையூறுகளோ தடைகளோ ஏற்படுத்துவதானது இலங்கையின் மதவுரிமைச் சட்டத்தின் கீழும் பாரிய குற்றமாகவே கருதப்படும்.

ஆனால் இலங்கை நாட்டிற்கும் இந்நாட்டில் வாழ்கின்ற நான்கின மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்ற இப்பேரினவாத செயற்பாடுகள் குறித்து இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கமோ, அவரின் கட்டளைக்கமைவாகச் செயற்படும் பாதுகாப்புத் தரப்புக்களோ இது வரைக்கும் வாய் திறக்காமல் இருந்து வருவதென்பது வெகு ஆச்சரியமானதொரு விடயமேயாகும்.

முஸ்லிம் சமூகத்தின் மீது நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இப்பகிரங்கப் பேரினவாத அடக்குமுறைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் எதிராக இதுவரையில் முஸ்லிம் மக்களும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைத்துவங்களும் எந்தவொரு வன்முறைகளிலும் ஈடுபடாமல் பொறுமை காப்பது இலங்கை நாட்டின் ஜனநாயகச் செயற்பாடுகளில் முஸ்லிம்களுக்குள்ள நம்பிக்கை இன்னும் குறைந்து போகவில்லை என்பதையே பறைசாற்றுகின்றது.

இப்பேரினவாத அடக்குமுறையாளர்களின் உள்நோக்கம்தான் என்ன?

இலங்கையின் சனத்தொகையானது தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக அண்மையக் குடிசனக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதே நேரம், முஸ்லிம்கள் நாட்டின் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகமாகவும் வியாபகம் பெற்றுள்ளனர்.

இதன் காரணமாகவே 'சிங்களத் தாய்மார்;களும் அதிகமான பிள்ளைகளைப் பெற்று தாய் நாட்டை பாதுகாக்க முன் வாருங்கள்' என்று அண்மையில் சில பேரினவாத சக்திகள் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்ததோடு, சிங்களத் தாய்மார்கள் அதிகமான பிள்ளைகளைப் பெறுகின்ற பட்சத்தில் அவர்களுக்கு விருதுகளும், ஊக்குவிப்புத் தொகைகளும் வழங்கப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெற்றும் வருகின்றன.

நாட்டின் சனத்தொகைப் பரம்பலில் இந்நிலையானது தொடருமானால் எதிர்வரும் காலத்தில் இலங்கை பாதியளவிலேனும் முஸ்லிம்களைக் கொண்ட ஒரு நாடாக மாறிவிடும் என்ற ஓர் அர்த்தமற்ற அச்சத்தின் காரணமாகவேதான் இன்று இவ்வாறான ஒரு சமூகத்தின் மீதான அடக்கு முறைகள் அரச ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இவ்விடையத்தை தம்புள்ளை பள்ளிவாயிலில் நடைபெற்ற வன்முறைக்கும், காடைத்தனத்திற்கும் தலைமை வகித்த ரங்கிரி விகாரையின் விகாராதிபதி இனாமளுவ தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியொன்றில் பகிரங்கமாகவே வெளிப்படுத்தி இருந்தார்.

எனவே எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பௌத்த சந்ததியை பெருக்க வேண்டுமென்பதற்காகவே தற்போதுள்ள இரண்டாம் நிலை இனத்தின் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதன் பிரதிபலிப்புக்கள்தான் இன்று 'பொது பலசேனா' என்னும் ஓர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மையின அப்பாவி இளைஞர்களுக்கு வன்முறையைப் போதித்து நாட்டின் எதிர்காலத்தையும் சிங்கள மக்களின் குடும்ப, சமூகக் கட்டமைப்புக்களையும், ஏனைய இன மக்களின் நிம்மதியான வாழ்க்கையையும் சீர்குலைக்கின்ற செயற்பாடுகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

முஸ்லிம்கள் ஆளடையாள அட்டைக்கு தொப்பி அணிந்து படம் பிடிப்பது பற்றிய சர்ச்சை, குர்பான் கொடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள், பள்ளிவாயில்கள் தகர்ப்பு, சிங்கள மொழி மூல பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களும், மாணவிகளும் எதிர்கொள்ளும் மத, கலாச்சார, பண்பாட்டு ரீதியான திட்டமிட்ட சவால்கள் போன்ற முஸ்லிம்களுக்கெதிரான சவால்களில் முன்னின்று செயற்படுவது இந்த 'பொது பலசேனா' அமைப்பே.

கடமை தவறிய முஸ்லிம் சமூக அரசியல் தலைமைகள்

இலங்கைத் தாயகத்தில் முஸ்லிம்களின் எதிர்கால இருப்புக்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் சமூகப் பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் வாய்மூடி மௌனிகளாகவே இருப்பதானது முஸ்லிம்களுக்கெதிரான இத்தகைய பேரினவாத அடக்குமுறைகளுக்கு மௌன அங்கீகாரம் அளிப்பதாகவே நோக்கப்படுகின்றது.

தேர்தல் மேடைகளில் முஸ்லிம்களின் உரிமைகள் என்றும், முஸ்லிம்களின் எதிர்காலம் என்றும் வீர வசனங்கள் பேசி வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரத்தைப் பெறும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களுக்கு அமைச்சுப் பதவிகளும் கதிரைகளும் கிடைத்த மறுகணமே முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம் சமூகத்திற்கு தங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் மறந்து அரசியல் சுயலாபங்களுக்காக முழுச் சமூகத்தின் குரல்களையுமே அடக்குகின்ற மாபாதகச் செயல்களையே காலாதி காலமாகக் கைக்கொண்டு வருகின்றனர். 

தம்புள்ளை நகரில் பட்டப்பகல் வேளையில் பிக்குகளின் தலைமையில் மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மா பள்ளிவாயில் தகர்க்கப்படுகிறது. முழு முஸ்லிம் சமூகத்தினதும் மதச் சுதந்திரம் பேரினவாதக் காடையர்களின் கால்களின் கீழே நசுக்கப்படுகிறது. மறுநாள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம்கள் தனித்துவமாகவும், செறிவாகவும் வாழும் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதியமைச்சர் ஒருவர் 'தம்புள்ள பள்ளிவாயலில் ஒரு தகரத்திற்கேனும் சிறியளவிலான சேதமும் இழைக்கப்படவில்லை' என அறிக்கை வெளியிட்டதை இலங்கை முஸ்லிம் சமூகத்தினால் மறந்து விட முடியாது.

இன்னுமொரு முஸ்லிம் நியமன உறுப்பினர் 'தினமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை உச்சரியுங்கள் நன்மை கிடைக்கும்' என்கிறார். எங்கே செல்கின்றன எமது முஸ்லிம் தலைமைத்துவங்கள் என்பதை இனியாவது எமது புலம்பெயர் உறவுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மாற்றுமத அரசியல் தலைவர்களை தர்காக்களுக்கும், பள்ளிவாயில்களுக்கும் அழைத்து வந்து அவர்கள் பெயரில் பிரார்த்தனை செய்த நமது இறையச்சம்(?)மிக்க முஸ்லிம் சமூகத் தலைமைகள் அதே பள்ளிவாயில்களும் தர்காக்களும் பேரினவாத சக்திகளால் உடைக்கப்படும்போது மாயமாகியும், மௌனமாகியும் போகின்றன.

தேர்தல் மேடைகள் தோறும் ஜனாதிபதியை அழைத்து வந்து 'எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு பள்ளிவாயிலுக்கும் எதுவித சேதமும் இழைக்கப்பட மாட்டாது' என்று வாக்குறுதியளிக்க வைத்து வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அதே ஜனாதிபதியின் கண் முன்னாலேயே முஸ்லிம்களின் கலாச்சார மையங்கள் அழித்தொழிக்கப்படும்போது காணாமல் போய்விடுகின்றன.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தையும், அரசுத் தலைமைகளையும் பாதுகாப்பதற்காக மிகக் கடுமையாக உலகம் சுற்றி வந்து உழைக்கின்ற உலமாக்களும், அரசியல் தலைமைகளும் நமது தாயகப் பூமியில் இஸ்லாமியச் சின்னங்களும், முஸ்லிம்களின் இருப்புக்களும் அழித்தொழிக்கப்படும்போதும் தமது பதவிகளையும், அரசு வழங்கும் சுகபோக வாழ்க்கைகளையும் தக்க வைத்துக் கொள்வதற்காக மௌனித்துப் போய் விடுகின்றன.

எனவேதான் புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற இலங்கை முஸ்லிம் உறவுகளான நாம் நமது பாரிய எதிர்ப்பையும், வன்மையான கண்டனத்தையும் இந்த பௌத்த பேரினவாத அடக்குமுறையாளர்களுக்கு எதிராகத் தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். நாம் இன்னமும் மௌனம் காத்து பொறுமை பூண்டிருப்போமாயின் எமது தாயக உறவுகளும் பர்மிய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பாரிய அவலங்களையே எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியேற்படும் என்பதை அனைவருக்கும் முன்னெச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகின்றோம்.

புலம்பெயர் முஸ்லிம் உறவுகளின் இந்த விழிப்புணர்வு தொடர்பாக பிரித்தானியாவிலுள்ள ழே. 10இ னுயறniபெ ளுவசநநவ எனும் முகவரியில் அமைந்திருக்கும் மாண்புமிகு பிரதமர் டேவிட் கெமரூன் அவர்களின் வாசஸ்தலத்திற்கு முன்பாகவும், பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா தூதுவராலயம் முன்பாகவும் டீடீளு எனப்படும் பொதுபலசேனாவின் வன்முறைகளையும், அடாவடித்தனங்களையும் பகிரங்கமாகக் கண்டித்து நமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் புலம்பெயர் முஸ்லிம் உறவுகளையும், ஏனைய சிறுபான்மை மக்களையும் ஒன்று திரட்டிய பாரிய நடவடிக்கையொன்றை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை இப்போது நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

இப்பாரிய எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைக்கு முன்னோடியாக எதிர்வரும் 14.04.2014ம் திகதி, (நாளை) திங்கட்கிழமை பிற்பகல் 05:00 மணிக்குஇ ஊசயறடநல சுர்10 1ளுஓ  எனும் முகவரியிலுள்ள ர்நணையடறiஉம ளுஉhழழட இல் பிரித்தானியாவிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், புத்திஜீவிகள் போன்றோரின் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டறியும் பொருட்டு திறந்த மக்கள் சந்திப்பொன்றையும் நாம் மிக அவசரமாக ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

எனவே, எமதன்புக்குரிய பிரித்தானியா வாழ் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள், சிறுபான்மைச் சமூகத்தினர் மற்றும் பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் அனைவரும் இத்திறந்த மக்கள் சந்திப்பில் தவறாது கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரியப்படுத்தி எமது நடவடிக்கைக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்குமாறு மிக்க வினயமாக வேண்டிக் கொள்வதோடு, இக்குறுகிய கால அழைப்பினை ஏற்று நேரில் சமூகமளிக்க முடியாதவர்கள் தயவு செய்து கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தங்களின் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் தெரிவித்து உதவுமாறும், இத்திறந்த மக்கள் சந்திப்பினதும், ஒருமித்த எதிர்ப்பினை வெளிப்படுத்தும் பாரிய கண்டன ஆர்ப்பாட்ட நடவடிக்கையினதும் அவசர அவசியத்தை நன்குணர்ந்துள்ள நீங்கள் அனைவரும் பிரித்தானியாவிலும், சர்வதேச நாடுகளிலும் வாழுகின்ற உங்களின் புலம்பெயர் உறவினர்கள், அன்பர்கள். நண்பர்கள் அனைவருக்கும் இச்செய்தியினை அவசரமாகப் பகிர்ந்து கொண்டு அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு ஒத்துழைக்குமாறும்  அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல இறைவன் நமது தூய நோக்கங்களை ஏற்றுக்கொண்டு அருள்பாலித்து வெற்றியடையச் செய்வானாக!

SLMDI UK mikg;gpd; nraw;ghl;lhsh;fSldhd njhlh;GfSf;F:

Bro. Nazeer - 07950 261775, Bro. Jabeer -  07446914555, Bro. Uwais  - 07723 006846, Bro. Fawzik  - 07872151294, Bro. Shafi  - 07577346123
                                                                                    Bro. Ilyas -  07722556464, Bro. Shifnas  - 07429025242
                                     SRI LANKA MUSLIM DIASPORA INITIATIVE UNITED KINGDOM
                                                   14,Loveletts,Gossops Green,Crawley,West Sussex RH11 8EG Uk
                                                                      Mob:00447950261775,Office:00441293415145,Fax:00441293415145,
                                                                          Skype:slmdi.uk,E-mail:slmdi.uk@gmail.com,Web:www.slmdi.org.uk

No comments

Powered by Blogger.