Header Ads



மரிச்சிகட்டு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான எந்த ஒரு காணியும் இல்லை - இராணுவம்


வில்பத்து சரணாலயத்தில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளமை தொடர்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன் கடற்படையினருக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டை, இராணுவம் நிராகரித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மரிச்சுகட்டு பிரதேசத்தில் யுத்தத்துக்கு முன்னர் 73 முஸ்லிம் குடும்பங்கள் குடியேறி இருந்ததாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

எனினும் அந்த பகுதியில் முள்ளிகுளம் கடற்படை முகாமை நிர்மாணிப்பதற்காக காணி சுவீகரிக்கப்பட்ட போது, இந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே வில்பத்து சரணாலயத்தின் வடக்கு பகுதியில் தற்காலிகமாக முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதனை முற்றாக மறுத்துள்ள இராணுவ பேச்சாளர் ருவான வணிகசூரிய, அமைச்சரால் கூறப்படும் மரிச்சிகட்டு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான எந்த ஒரு காணியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காணி சுவீகரிக்கப்படும் போது, எந்த ஒரு முஸ்லிம் குடும்பமும் தங்களின் காணி சுவீகரிக்கப்படுவது தொடர்பில், தெரியப்படுத்தப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அய்யா தளபதி அவர்களே, மறிச்சிக்கட்டி என்ற முஸ்லிம் கிராமம் ஒன்று இருந்தது என்பதையும் இராணுவம் அக்கிராமத்தில் இப்போது குடியேறி இருக்கின்றது என்பதையாவது ஒத்துக்கொள்கிறீர்களா?

    ReplyDelete

Powered by Blogger.