Header Ads



அரபு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல் பாகங்களை விற்பனை - அமைச்சரின் தகவல்

மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏதெனும் விபத்துக்கள் அல்லது வேறும் காரணிகளினால் மூளை இறக்கும் நபர்களின் உடல் பாகங்கள் இவ்வாறு கொள்ளையிடப்படுகின்றன. உடல் பாகங்கள்; விற்பனை செய்யப்படுவது குறித்த தகல்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் அதனை இன்னமும் சரியாக உறுதி செய்துகொள்ள முடியவில்லை.

எதிர்காலத்தில் இது தொடர்பான சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மத்திய கிழக்கில் உயிரிழப்போரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தால் உள்நாட்டிலும் உயிரிழந்த நாட்டிலும் பிரேதப் பரிசோதனை நடாத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் 106 இலங்கையர் தடுத்து வைப்பு

குவைத்தில் வேலை வாய்ப்புக் காகச் சென்று அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 160 இலங்கையர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொலை, கொள்ளை, மது அருந்துதல், முறைகேடான தொடர்பு போன்ற காரணங்களூடாக குவைத் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் கேட்ட வாய்மொழி மூல விடைக்கான கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்வேறுபட்ட காரணங்களுக்காக தாங்கள் தொழில் புரியும் இடத்தில் இருந்து வெளியேறி குவைத்திலுள்ள ஊழியர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அவர்களது தொழில் தருநரின் பொலிஸ் முறைப்பாட்டை ரத்துச் செய்தல் கைரேகை பதிவு செய்தல். வெளியேறுவதற்கான தற்காலிக அனுமதி பத்திரத்தை பெறல் போன்ற நடவடிக்கைகள் முடியும்வரை அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள்.

இவ்வாறு பல்வேறுபட்ட தவறுகளுக்காக தண்டனை அனுபவிக்கும் இலங்கையர் தொடர்பாக ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவிலுள்ள அதிகாரிகள் செயற்பட்டு வருகிறார்கள்.

இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காகவும், தற்காலிக இடங்களில் தங்கியிருப்பவர்களை அழைத்து வருவதற்குமாக தற்காலிக அனுமதி பத்திரம். விமான பயண சீட்டு என்பவற்றை பெற்றுக்கொடுக்க பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பணியகம் எவ்வித காலதாமதமுமின்றி இதனை செய்து வருகிறது.

அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக வெகு விரைவில் இவர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்றும் அமைச்சர் டிலான் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.