''வடகிழக்குக்கு வெளியில் முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்தை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளது''
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
ஆளும் கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது வடகிழக்குக்கு வெளியில் முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய மாகாண சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.எம். உவைஸ் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டம் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரு ஆசனங்களை வென்றெடுத்துள்ளது. ஆனால் ஆளும் தரப்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்ட வாக்குகள் கட்சிக்குரிய தனித்துவமான வாக்குகளாகும்.
மக்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்குகளுக்கு சமமாகும் என்று கொக்கரித்தவர்களின் பேச்சை மக்கள் நம்பவில்லை என்பதை மேல் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்ட வெற்றி வெளிக்காட்டுகின்றது.
இம்மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை மக்கள் மத்தியில் கட்சியையும் அதன் கொள்கையையும் முன்னிறுத்திய தேர்தல் பிரசாரத்திற்கு அப்பால் இனவாத சக்திகளின் சவால்களுக்கு நாளுக்கு நாள் ; முகங்கொடுக்க நேரிட்டமையை முஸ்லிம் சமூகம் நன்கறியும். இத்தகைய இனவாதிகளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை அரிசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கும் அல்லது முஸ்லிம் காங்கிரஸை இல்லாதொழித்து விடலாம் தருணம் பாhத்திருந்தமையை இதன் மூலம் உணர முடிகின்றது.
இப்பின்னணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு தன்மானத்துடன் முஸ்லிம் சமூகத்திற்காக செயற்படும் கட்சி என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்துள்ளது. இந்த உண்மையை இன்னும் அதிகமான மக்கள் உணர்ந்திருப்பார்களாயின் இதைவிடவும் கூடியளவு ஆசனங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.
சரியாக சொன்னார்.... இந்த 'தலைவர்' ..... எத்தனை உருப்பினர் தேர்தலில் வெற்றி என்று சொல்லும் இவர் எத்தனை பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளது என்று யாறும் கேட்டால் இவரிடம் பதில் நிச்சயமாக கிடையாது.
ReplyDelete