Header Ads



ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் 7 பேர் சமாதான நீதவான்களாக நியமனம்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என். மூபீனின் வேண்டுகோளின் பேரில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் 7 பேருக்கு வழங்கி வைக்கப்பட்ட  மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான்  நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று 06-04-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சின்; மக்கள் தொடர்பு அதிகாரியின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எம்.ஆதம் லெப்பை,ஒய்வு பெற்ற ஆசிரியர் எம்.எச்.எம்.இஸ்மாயில்,ஆசிரியர் எம்.எம்.இப்றாஹீம், காத்தான்குடி நகர சபை வருமான பரிசோதகர் எம்.எம்.எம்.பாரூக்,செரன்டிப் டயர் மார்ட உரிமையாளர் எம்.ஐ.எம்.ஜவ்ஸான்,சமூக சேவையாளர் ஏ.பி.அபூ ஆகியோர்; மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான்களுக்கான நியமனக்கடிதங்களை உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி யு.எல்.எம்.என். மூபீனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) ,அல் அமீன் வித்தியாலய பிரதி அதிபர் யாஸிர் அறபாத், உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியின் இணைப்பாளர் தௌபீக்  என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு கண்டி மாவட்ட நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவானாக நீதி அமைச்சினால்  நியமிக்கப்பட்ட சமூக சேவையாளர் ஏ.எஸ்.எம்.இம்தியாஸூக்கான நியமனக் கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.