நிந்தவூரில் 35 மாணவர்கள் "முறத்தில்" பட்டம் பெற்றனர்..
(சுலைமான் றாபி)
நிந்தவூர் அட்டப்பள்ளம் புர்கானிய்யா குர்ஆன் மதரசாவில் இருந்து அல்-குர்ஆனைக் கற்று வெளியான 35 மாணவர்களுக்கு இன்று 15.04.2014 "முறத்தில்" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மதரசாவின் அதிபர் மௌலவி ஏ.ஏ. அப்துர் றஸ்ஸாக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை, நிந்தவூர் அஸ்-சஹீதா வித்தியாலய அதிபர் எம். அன்வர், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.வை. வசீம், பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் மௌலவிமார்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை "முறத்தில்" பட்டத்திற்கு 15 மாணவர்களும், 20 மாணவிகளுமாக 35 மாணவர்கள் தெரிவாகியது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment