21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாம்..?
21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாம், பல பிரச்சிணைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து எமது எதிர்கால இளம் தலைவர்களுக்கும் சிறார்களுக்கும் நல்லதோர் எதிர்காலத்தை காட்ட வேண்டிய கட்டாய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.
எமது நாட்டில், எமது சமூகத்துக்கு என தனித்துவமான பல அரசியல் கட்சிகளும் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புக்களும் காணப்படுகின்ற இந்த கால கட்டத்தில், அனைத்து அமைப்புக்களையும் உள்ளடங்கிய ஒரு சூரா சபை இல்லாத படியினாலே, இன்று அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் தாம் நினைத்தவாறு, தம் இஷ்டப்படி, இஸ்லாமிய கட்டுப்பாட்டிற்குள் அடங்காமால், கண்ட நின்றவாறு, கண்மூடித்தனமான அறிக்கைகளை, மேடைகளில் முழங்குபவர்களாக இருப்பதை நாம் காண்கிறோம்.
இஸ்லாம் என்பது சாந்தி, சமாதானம், அடக்கம், பொறுமை, விட்டுக்கொடுப்பு என்பனவற்றை உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம்.
எமது சமூகத்தில் கிழக்கில் உதித்துள்ள உலமாக்கள் அமைப்பு (கட்சி) கூட இஸ்லாமிய அரசியல் நடைமுறை செயல்பாடுகள் கொண்டதாக காணப்படவில்லை. உலமாக்கட்சி என்றால் எமது ஏனைய கட்சிகளையும் விட வேறுபட்டதாக இருக்க வேண்டும்.
ஆனால், உலமாக் கட்சியும் ஏனைய எமது அரசியல் கட்சிகளும் செயல்படுகின்ற விதத்தை நிதானமாக உற்று அவதானிக்கையில், உலமா கட்சிக்கும் ஏனைய எமது தனித்துவமான கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை எனும் அளவுக்கு காணப்படுகிறது. மேலும் “உலமாக் கட்சி” என்ற பெயர் கொண்ட ஒரு அமைப்பு செயல்பட்டுக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏன் இந்த அமைப்புக்கு உலமாக் கட்சி என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல; ஏனைய கட்சிகள் விடுகின்ற, மேடை முழக்கங்கள் போன்று, இந்த உலமா கட்சியின் தலைமை பீடமும், இஸ்லாமிய அரசியலுக்கு மாற்றமான, ஒன்றுக்கொண்று முரண்பட்டதான அறிக்கைகள் விடுகின்றவர்களாகவே நாம் காண்கின்றோம்.
இந்த உலமா கட்சி கூட இஸ்லாமிய அரசியலை சரியாக செயல்படுத்தி, நடைமுறைப்படுத்தி காட்டாவிட்டால், இந்த அமைப்பின் தலைமை பீடத்தை ஏனைய சமூகம் எவ்வாறு நினைப்பார்கள். உலமாக்கள்தான் சரியாக வழிகாட்ட வேண்டும். உலமாக்களின் அனைத்து செயல்பாடுகளும் தான் எமது சமூகத்தின் வழிகாட்டலாகும். இதை ஒவ்வொரு ஆலிம்களும் செயல்படுத்த கடமைப்பட்டவர்களாவர். ஆகவே உலமா கட்சி, தனது செயல்பாடுகள் மற்றும் தான் விடும் அறிக்கைகள் அனைத்தையும் தமது சூரா சபைக்கு அமைய மிகவும் நிதானமாகவும், பக்குவமாகவும், அமைத்துக்கொள்ள வேண்டும்.
எமது நாட்டில் உள்ள அனைவரும் தாம் நினைத்தவாறு தம் இஷ்டப்படி பிற மதத்தவர்களை விமர்சிக்கும் விடயங்களை தவிந்து கொள்ள வேண்டும். எமக்கு இஸ்லாம் மிகவும் அழகாகவும், தெளிவாகவும் பிற மதத்தவர்களை எவ்வாறு மதிக்க வேண்டும், அவர்களுடம் கதைக்க வேண்டும், பழக வேண்டும். என்பதை அழகிய முறையில் சொல்லிக்காட்டயுள்ளது.
கடந்த 1915ஆம் ஆண்டில் சிங்கள, முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று நிகழ்ந்தாக நாம் அறிவோம். அப்படியான ஒரு இனக்கலவரம் இந்த நாட்டில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் ஏற்படக்கூடாது என்பதே எமது பிராத்தணையாஇருக்கவேண்டும்.
30ஆண்டுகளாகமேற்கொண்டயுத்தத்துக்குமுற்றுப்புள்ளிவைத்தஇன்றையஆட்சியாளர்,சிங்கள, முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று இடம் பெற இடம் கொடுக்க மாட்டார் என்பது சகல இனத்தவர்களினதும் ஒன்றுபட்ட கருத்தாகும். இன்று வெளி நாட்டு உதவிகளுடன் பொருளாதார ரீதியில் நாட்டை வளச்சிப் பாதையில் கொண்டு செல்லும் இன்றைய ஆட்சியாளர், மீண்டும் இந்த நாட்டை ஒரு இனக்கலவரத்துக்கு இட்டுச் சென்று நாட்டின் பொருளாதரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் ஒரு பெரும் செயலான இனக் கலவரம் ஒன்று இடம்பெற வழி செய்ய மாட்டார்.
இன்று இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் திரைக்குப்பின்னால் பலர் செயல்படுகின்றதை நாம் பத்திரிகை மற்றும் இணையதளங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது. இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அந்த அடிப்படையில் செயல்படுகின்றவர்கள், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில், எதிர்வரும் 2015ம் ஆண்டு, மீண்டும் சிங்கள , முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் கணப்படுகின்றன. அல்லாஹ் அதனை பாதுகாக்க வேண்டும். இறைவன் கூறியுள்ளான். “எமது சமூகத்தின் தலையெழுத்தை நாமே மாற்றிக்கொள்ளாதவரை, நான் மாற்ற மாட்டேன்” என்பதாக மிகவும் தெளிவாக கூறியுள்ளான். அந்த கூற்றை நாம் மிகவும் சிந்தனையுடனும், நிதானத்துடனும் பார்த்தோமேயானால், நாம் இந்த நாட்டில் பெரும்பான்மைச் சமூகத்துடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், செயல்பட வேன்டும் என்பது பற்றி, இஸ்லாம் என்ன கூறியிக்கின்றது என்பதை அறிய வேண்டும். விளங்கிக் கொள்ள வேண்டும்.
இறைவன் கூறுகிறான்: “ இறையச்சத்துடன் நடந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு கற்பிப்பேன்.” இந்த வசனத்தை நாம் நன்கு சிந்தித்து விளங்கிக்கொண்டால் நம் சமூகத்தில் வாழ்வதற்கான படிப்பினைகளை எமக்கு உணர்த்தும், ஏற்படுத்தும். எமது முழு வாழ்வையும் தக்வாவுடன் வாழ முடியுமாக இருந்தால், நாம் எந்த பிரச்சிணைகள் வந்தாலும், அவைகளை மிகவும் சுலபமாகவும், இலகுவாகவும் முகம் கொடுத்து வென்று விடலாம். இஸ்லாம் மிகவும் இலகுவனது என்பதுவும், தக்கவா உடையவர்களுக்கே ஆகும்.
புனித குர்ஆன் 23 ஆண்டுகளாக இறக்கப்பட்டதை அறிந்து வைத்திருக்கின்றோம். இது சந்தர்ப்ப சூழ் நிலைக்கு ஏற்றவாறும் மற்றும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கான வழிமுறையாகவும், இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதாகும். அதனை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். ஆனால் எமக்கு பிரச்சினைகள் வரும் போது அவைகளை நாம் அறியாதவர்களாகவே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதை கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பவர்களாக நாம் இல்லை. இது பெரும் கவலைக்குரிய விடயாமககும்.
இன்று எமது சமூகத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமை அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால் இஸ்லாம் கூறியிருக்கும் முக்கியமான பிரதான விடயமாக இருக்க வேன்டிய எமது சமூகத்தின் ஒன்றுபடுதல், கட்டுப்படுதல் என்ற, தக்வாவுக்கு உள்ளடங்க வேண்டிய, அம்சம் காணப்படாததால், எமது சமூகம் இன்று பல பிரச்சிணைகளுக்கு முகம் கொடுத்து, அமைதியான சக வாழ்வு வாழ முடியாதவர்களாக இருக்கின்றோம்.
எமது இஸ்லாமிய நெஞ்சங்களே..! நாம் இந்த உலகில் வாழ வந்தவர்கள் அல்ல. இந்த அழிந்து போகும் உலகில் சொற்ப காலம் மட்டுமே தங்கி வாழப்போகின்றோம். இதற்குள், இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் முன்மாதிரியான, எமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழந்து காட்டிய வழிகாட்டலில் வாழ்ந்தோமென்றால், இறைவன் கூறிய படி இஸ்லாம் இலகுவாக இருக்கும். எமது வாழ்க்கையிலும் பிரச்சினைகள் ஏற்படாது.
இஸ்லாம், எமக்கு காலத்துக்கு காலம் தோன்றக்கூடிய பிரச்சினைகள் பற்றி, புனித குர் ஆனில் மிகவும் ஆழமாகவும் அழகாகவும் கூறியிருப்பதை அறிவோம். எமது இலங்கை நாடு, பல இனங்களை கொண்ட நாடாகும். குறிப்பாக பௌத்த பெரும்பான்மை சகோதரர்களை கொண்ட நாடு என்பதை நாம் மனதில் கொண்டு எமது செயல்பாடுகளை மேற்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எமது இஸ்லாமிய அழைப்புப்பணிகளை மேற்கொள்ளும் பொழுதும், அறிக்கைகள் விடும் பொழுதும், மேடைகளில் முழங்கும் பொழுதும் அந்நிய சமூகத்தவர்களின் மனம் பாதிக்கப்படாதவாறும் புன்படாதவாறும் எமது பணிகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும். இன்று உலகில் இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லக்கூடிய நாடுகளில் கூட, பிற மதத்தவர்களை மதித்தவர்களாகவும், வேலைக்காக சென்றிருக்கும் அந்த பணியாளர்களுக்கும் மத சுதந்திரத்தை அந்தந்த நாட்டின் சட்டத்திட்கு ஏற்ப தடுக்காதவாறு சில ஒழுங்கு முறைகளை செய்தும், கண்டும் காணாததுமாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அதுமட்டுமல்ல, அங்கு எமது பள்ளிவாயல்களில் நோன்பு காலங்களில் கூட, நடு இரவில் ஒலி பெருக்கி மூலம் இஸ்லாமிய பணிகளை செய்வது கூட தடை செய்யப்பட்டிருந்த நிலமைகளும் உண்டு.
குர் ஆன் , ஹதீஸ் படி நாம் வாழவேண்டும் என்பது 100% ஆன உண்மையாகும். அதை யாரும் மறுக்க முடியாது. மறுக்கவும் மாட்டோம். ஆனால், காலத்துக்கும் சூழ் நிலைக்கும் ஏற்றவாறு, “தக்வாவுடன் செயல்படுங்கள்” என்பதாக புனித குர் ஆன் வழிகாட்டியுள்ளதையும் நாம் மறந்து விடக்கூடாது.
நாம் (நான்) இஸ்லாத்தை சரியாக விளங்கி, புரிந்து ( தக்வாவுடன்) இந்த அழிந்து போகும் உலகில் வாழ முடியும். தக்வா என்பது சகல தரப்பினரையும் சாரும். அதற்கு படித்தவர்கள், படிக்காதவர்கள், பணக்காரன் என்ற தராதரம் கிடையாது. மேலும் அதிகாரம் உள்ளவர்களிடத்திலும் தக்வா “ இருத்தல் அவசியம் ஆகின்றது. தக்வா என்ற இறையச்சம் இல்லாத காரணத்தினாலேயே எமது சமுகம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
உமர் (ரழி) அவர்கள் பற்றி நாம் அறிவோம். அவர்களின் வீரம் பற்றியும் நாம் நன்கு அறிவோம். உமர் ரழி, நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாக, ஷூரா அடிப்படையிலான இஸ்லாமிய அரசியல் நடவடிக்கைகள் மூலம் கிடைத்த வெற்றி வரலாறுகளை நாம் அறிந்தவர்களாகவும் இருக்கின்றோம்.
ஆகவே நாம் இன்றைய கால கட்டத்தில், அனைத்து அமைப்புக்களினதும் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாகவும், சூரா அடிப்படையில் தீர்வுகள் எடுக்கப்படவேண்டியவர்களாகவும், மேற்கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.
Abu Yusry
Post a Comment