கடலுக்கடியில் மலேசிய விமானத்தை தேடும் பணி முடிய 2 மாதம் ஆகும்
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நீர்முழ்கி கப்பல் தனது தேடுதல் வேட்டையை முடிக்க இரு மாதங்களாகும் என அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் விழுந்ததாக கூறப்படும் இக்கடல் பரப்பு ஏறத்தாழ 600 சதுர கி.மீ. ஆகும். திங்களன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ப்ளுஃபின் என்ற அந்த கப்பல் 6 மணி நேரம் கடலுக்குள் மூழ்கி தனது தேடுதல் எல்லையான 4.5 கி.மீ ஆழத்தையும் தாண்டி சென்று தேடியதுடன் பின்னர் மேற்பரப்பிற்கும் திரும்பியது.
பெர்த்தில் இருந்து வட மேற்காக சுமார் 1550 கி.மீ தூரத்தில் விமானம் கடலில் விழுந்திருப்பதாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். தங்களுக்கு 4 தடவையாக கிடைத்துள்ள ஒலி அதிர்வலைகளை தொடர்ந்தே அவர்கள் இவ்வளவு உறுதியாக தேடுதல் பணிகளை செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக எந்த வித அதிர்வலைகளும் கிடைக்காததால் பேட்டரிகள் செயலிழந்து போனதால் கருப்பு பெட்டியின் ஆயுள் முடிந்துவிட்டதோ என்றும் தோன்றுகிறது. இரு மாதங்களுக்கு பிறகாவது விமானம் குறித்து உண்மையான தகவல் கிடைக்குமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
Post a Comment