Header Ads



இம்மாதம் 15 ஆம் திகதியும் விடுமுறை

(எம்.எம்.ஏ.ஸமட்)

இம்மாதம் 15ஆம் திகதி பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்கான  பொது, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை தினங்களாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக 15ம் திகதியும் பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அவ்வாரத்தின் 18ஆம் திகதியும் பெரிய வெள்ளிக்கிழமைக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை தினமென்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.