Header Ads



சவூதி அரேபியாவில் மரணமான பெண்ணின் உடல், 10 மாதங்களின் பின் இலங்கை வந்தது

சவூதி அரேபியாவில் இறந்த கல்முனைப் பெண்மணியின் உடல் 10 மாதங்களின் பின் கடந்த நேற்று முன்தினம் சனிக்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று ஞாயிறன்று 20-04-2014 கல்முனை நற்பிட்டிமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவர் கடமையாற்றிய சவுதி அரேபிய வீட்டு எஜமானின் நிதிச் செலவுடன்; அங்குள்ள பிரேத பெட்டியில் பூரண சுகாதார முறையில் இறுக்கி அடைக்கப்பட்ட நிலையில் கல்முனை வந்து சேர்ந்தது. கல்முனை நற்பிட்டிமுனையிலுள்ள வீட்டில் ஒருநாள் வைக்கப்பட்டு இந்து முறைப்படி சகல கிரியைகளும் நடாத்தப்பட்ட போதிலும் பெட்டி திறக்கப்ப்படவில்லை. சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் நற்பிட்டிமுனை இந்து மயானத்திற் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு 15 நிமிடங்களின் பின் உறவினர்களுக்கு காட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

சவூதி அரேபியாவில் இறந்த பெண்மணியின் உடல் 8 மாத காலமாகியும் இலங்கை வரவில்லை.. எனவே உரிய நடவடிக்கை எடுத்து சடலத்தை தந்துதவுமாறு உறவினர்கள் வெளிவிவகார அமைச்சிடம் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்திருந்த செய்தி ஏலவே ஊடகங்களில் வெளிவந்திருந்தமை தெரிந்ததே.



No comments

Powered by Blogger.