சவூதி அரேபியாவில் குற்றவாளிக்கு 10 நாளில் மரண தண்டனை
சவூதியில் இந்தியரை கொன்ற கொலைக் குற்றவாளிக்கு கொலை செய்த பத்தே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 31.03.2014 அன்று சவுதி அரேபியா ரியாத் நகரில் சவூதி பிரஜையால் இந்தியா் ஒருவா் பட்டப்பகலில் நடு ரோட்டில் குத்திக்கொல்லப்பட்டார். அதன் வீடியோ காட்சிகள் இணைத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் கொலை செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டதோடு, நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றம் நடந்த பத்தே நாளில் சவூதி நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததோடு, தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. Inn
ஜப்னா நிவ்ஸ்கு ஒரு அன்பான வேண்டுகோள் செய்திகள் அதன் உண்மை நிலை அறியாமல் வெளியிட வேண்டாம்
ReplyDeleteஇச்செய்தியை ரியாத் பொலிஸின் உத்தியோகபூர்வ பேச்சாளர் பவாஸ் அல்மைமன் நேற்று மறுத்துள்ளார் இக்காணொழிக்கும் இந்தியரை கொலை செய்தவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது வதந்தி இவ்வாறான தண்டனைகள் இவ்வாறு அவசரமாக நிறைவேற்றப்படுவதில்லை
http://sabq.org/YYWfde
இந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கும் (பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தியின் பிரகாரம்) செய்தியில் குறிப்பிடப்பட்ட கொலை குற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை சவுதி அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது என்பதுடன் குறித்த திகதியில் இந்தியரை படுகொலை செய்த கொலையாளி இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
ReplyDeleteஇச்செய்தி ஸவுதியிலும் வேகமாகப் பரவியது. எனினும் இத்தகவல் ஓர் வதந்தி என ஸவுதி அரேபியா நிவ்ஸ் பேப்பரில் நேற்று வெளியிடப்பட்டது. கொலையாளி சிறைப் பிடிக்கப்பட்டுள்ளது உண்மை. இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
ReplyDelete