Header Ads



உளவு பார்த்ததாக புகார் - அமெரிக்க கடற்படை வீரருக்கு ஈரானில் 10 ஆண்டு ஜெயில்

அமெரிக்காவின் அரிசோனாவை சேர்ந்தவர் அமீர் ஹெக்மாடி (31). அமெரிக்க வாழ் ஈரானியர். இவர் அமெரிக்க கடற்படையில் வீரர் ஆக பணிபுரிந்தார்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவ தளங்களிலும் பணி புரிந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2010–ம் ஆண்டில் தனது பாட்டியை பார்க்க ஈரான் வந்தார்.

அப்போது, அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனத்துக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். அவர் மீது ஈரான் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதை எதிர்த்து ஈரான் சுப்ரீம் கோர்ட்டில் அவர் அப்பீல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கில் நேற்று மரண தண்டனை 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.