100 கோடி ரூபா பெறுமதியென மரக்கடத்தல் முறியடிப்பு
உலக நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான Rosewoodமரக்கடத்தலை இலங்கை சுங்க திணைக்களம் முறியடித்துள்ளது. ஆபிரிக்க நாடொன்றிலிருந்து இலங்கை ஊடாக ஐரோப்பிய நாடொன்றுக்கு மீள் ஏற்றுமதி செய்வதற்காக ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த 28 கொள்கலன்களை சுங்க பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி உலக பெறுமதியின் படி 10,000 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை நாணயப்படி நூறு கோடி ரூபா என்றும் சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
உலகில் மட்டுமல்ல இலங்கை சுங்க திணைக்கள வரலாற்றில் இவ்வாறான பாரிய முறியடிப்பு நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவை எனக் குறிப்பிட்ட சுங்க திணைக்களத் தலைவர் ஜகத் விஜேவீர உலக அளவில் நடத்தப்படும் இந்த மரக்கடத்தலை தடுக்கவோ, முறியடிக்கவே எந்த ஒரு நாடும் முன்வர அச்சமடைந்துள்ள நிலையில் இலங்கை சுங்க திணைக்களம் இதனை முறியடித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
ரோஸ்வுட் மரத்தை வெட்டுவதோ அல்லது கடத்துவதோ உலக அரங்கில் மிகவும் தடை செய்யப்பட்டதொன்றாக கருதப்படுகிறது. 6 கொள்கலன்களில் Rosewood மரக்குற்றிகள் மீள் ஏற்றுமதிக்காக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்ற இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து இலங்கை சுங்க திணைக்களத்தின் பல்லுயிர் மற்றும் கலாசார மரபுரிமைகள் பாதுகாப்பு பிரிவு (Bio Diversity, Cultural and National Heritage Protection Branch) உடனடியாக கொள்கலன்களை சோதனையிட்டது, எனினும். 6 கொள்கலன்களுக்கு பதிலாக 28 கொள்கலன்களிலும் ‘ஞிosலீwooனீ’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 28 கொள்கலன்களையும் சுங்க திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று 28 கொள்கலன்களும் திறக்கப்பட்டு ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது. தென்னாபிரிக்க நாடொன்றிலிருந்து கடந்த திங்கட்கிழமை கியோஸ் என்ற கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இக்கொள்கலன்கள் யாவும் லிப்ரா என்ற கப்பல் மூலம் ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன, இதன் பின்னணியில் ‘மாபியா’ போன்ற பயங்கர அமைப்புகள் உள்ளதால் எந்தவொரு நாடும் இதனை தடுக்க முன்வராத நிலையிலேயே இலங்கை சுங்க திணைக்களம் துணிந்து இதனை முறியடித்துள்ளனர்.
Post a Comment