கடன் சுமை காரணமாக, தற்கொலை செய்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - UNP
கடன் சுமை காரணமாக, தற்கொலை செய்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் 25-03-2014 இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய கட்சியின் ஊடக பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அரச அமைச்சர்களின் மின்சார கட்டண பட்டியல் தொடர்பில் நாட்டிற்கு தெளிவுப்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அரசாங்கத்தை கோரியுள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்சவின் மின்சார கட்டணப்பட்டியல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment