கிழக்கில் காணாமல் போன, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கண்டறிய மரபணு சோதனை - UNDP + ICRC உதவி
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பிற்கு கடந்த 22.03.2014 அன்று விஜயம் செய்த போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் காத்தான்குடியிலிருந்து காணாமல் போன 137 பேருடைய உறவினர்களை அழைத்துச் சென்றிருந்தார்.
மேலும் அவர் கேட்டுக் கொண்டதிற்கிணங்க 1990 களில் குருக்கள் மடத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் (முஸ்லிம்களை) இடங்களை காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நேரில் சென்று பர்வையிட்டதுடன் காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் நேற்று திங்கட்கிழமை கொழும்பு சென்று ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் ஆகியோருடன் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இதன் போது குறித்த இடங்களில் உள்ள புதைகுழிகளை தோண்டுவது எவ்வாறு, மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்குரிய மரபணு சோதனைகளை எவ்வாறு மேற் கொள்வது என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் இதற்குரிய நிதி உதவிகளை UNDP வழங்கும் எனவும், ICRC யினரின் மேற்பார்வையின் கீழ் இது இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்களின் வேண்டுகோளின் படி காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி விஷேடமாக காத்தான்குடிக்கு விஜயம் செய்து காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளையும் மேற் கொள்ளவுள்ளது.
இந்தளவுக்கு செலவு செய்து என்னத்தை சாதிக்கப்போகிறார்கள்?காணாமல் போனோர் காணாமல் போனோர்தான்,அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று ஆராய்வதைவிட,எவ்வாறு காணாமல் போணார்கள்,காரணங்கள் என்ன என்றுதான் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் எதிர்காலத்திலும் காணாமல் போதல் தடுக்கப்படும்.
ReplyDeleteமுஸ்லிம்களைப்பொருத்தவரை,காணாமல் போனதற்கு அன்று அப்பகுதியில் இருந்த புலிகளே காரணம்,அதிலும் பகுதி பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட பிள்ளையான்,கருணா என்பவர்கள்தான் விசாரிக்கப்படவேண்டும்,செய்வார்களா?இல்லவே இல்லை,காரணம் அவர்கள் ஆட்சியில் உள்ளவர்கள்.இதேபோல் யாராலும் ஒரு அப்பாவியின் பெயர் காரணமாக இருந்தால் சும்மா விடுவார்களா?இல்லவே இல்லை.
இந்துக்கள் காணாமல் போனதற்கு இரானுவத்தினர் காரணம் என்று எல்லோருக்கும் தெறியும்.அப்போ விசாரிப்பார்களா?இல்லவே இல்லை.ஆக,மொத்தத்தில் இதெல்லாம் உங்களை ஏமாற்றும்,உலகை ஏமாற்றும் கண்துடைப்புக்கள்.நேரத்தையும் பணத்தையும் செலவுசெய்து சாதிக்கப்படப்போவது இதனால் ஒன்றுமில்லை.
காணாமல் போனோர்,என் பின்னூட்டலை படித்து மணம் நோகவேண்டாம்.உங்களில் ஒருவனாக இருந்துதான் இதனை சொல்லுகிறேன், நீங்கள் இன்னுமும் ஏமாரக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.