புதிய ICC தரப்படுத்தல் - இலங்கைக்கு முதல் இடம்
சர்வதேச இருபதுக்கு -20 கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம் அணிகள் தர வரிசையில் இலங்கை 129 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலுள்ளது.
அண்மைக்காலங்களில் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத போதிலும் , விகிதாசார புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி இரண்டாவது இடத்திலுள்ளது.
துடுப்பாட்ட தரவரிசையில் நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்லம் முதலிடத்தில் உள்ளதுடன் , இந்திய வீரர்கள் விராத் கோஹ்லி , சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங் ஆகியோர் முறையே 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளனர்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் முதலிடத்தில் நீடிப்பதுடன் , சகலதுறை ஆட்டக்காரர் பட்டியலில் பாகிஸ்தானின் மொஹமட் ஹாபிஸ் முதலிடத்தில் உள்ளார்.
இதேவேளை,சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியிலில் விராட் ஹோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிராக சதமொன்றை பெற்றதன் மூலம் 886 புள்ளிகளைப் பெற்று, அவர் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.
ஏபிடி வில்லியஸ், இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், ஜோர்ஜ் பெய்லி, ஹசீம் அம்லா, ஆகியோர் முறையே 3 ஆம், 4 ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்கார 4 ஆம் இடத்தையும், மஹேந்திர சிங் தோனி 6 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தொடரின் சிறப்பாட்டகாரராக தெரிவுசெய்யப்பட்ட லஹிரு திரிமான்ன 29 இடங்கள் முன்னேறி 39 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை சர்வேதச ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் சயீட் அஜ்மால் முதலிடத்திலும் டேல் ஸ்டெய்ன் 2 ஆம் இடத்திலும் நீடிக்கின்றனர்
சூழற்பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஹபீஸ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் 20 இடங்களுக்குள் முன்னேறியுள்ளனர்.
Post a Comment