மதவழிபாட்டு இடங்கள் தாக்குதலுக்கும், அரசுக்கும் எந்தத் தொடர்புமில்லை - ஜெனீவாவில் பீரிஸ்
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை நிராகரிப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் அறிவித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் இன்று உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்கும் வகையில், அவரது உரை அமைந்திருந்தது. சிறிலங்கா இராணுவத்தினர் ஒருபோதும் சிவில் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை.
வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகம் எந்தவிதமான தங்கு தடையின்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நல்லதொரு உதாரணம் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்ட வடக்கு மாகாணசபை தேர்தலாகும். வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தியது இந்த நடைமுறையின் உச்ச தன்மையை எடுத்தியம்பியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளின் நியமனங்கள் சிறிலங்கா அதிபரின் நிறைவேற்று அதிகாரத்திற்கு உட்பட்டவை. இந்த நியமனங்கள் தொடர்பான வெளிநாடுகளின் தலையீடுகள் வருந்தத்தக்கது. வடக்கு மாகாணத்தில் 2009 ஆம் ஆண்டு இருந்ததை விட, 30 வீதமான படையினர் குறைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 26 வீத படைக்குறைப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா படையினரால் பாலியல் கொடுமைகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகளை அடியோடு மறுக்கிறோம். அவ்வாறான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தால் மிக கடுமையான அதிகாரத்தை நாம் பிரயோகத்திருப்போம்.
சிறிலங்கா தொடர்பாக அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் விதத்தில் முன்வைக்கப்படும் தீர்மான வரைவையும், சிறிலங்கா தொடர்பான ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையையும் நாம் நிராகரிக்கிறோம்.
மிகக் கொடூரமான யுத்தம் சிறிலங்காவில் நடந்து முடிந்துள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தேசியத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கில் இனப்பாகுபாடு காட்ட அரசாங்கம் முனையவில்லை.
போருக்கு முன்னர் வடக்கில் 75 ஆயிரம் முஸ்லிம்களும் 35 ஆயிரம் சிங்களவர்களும் வாழ்ந்தனர். எனினும் தற்போது சிங்களவர்கள் அல்லாதோர் 51 வீதத்தினர் கொழும்பில் வசிக்கின்றனர். இந்தநிலையில், சிறிலங்காவில்ஒரு இனத்துக்கு என்று தனித்துவமான ஒரு பிரதேசத்தை ஒதுக்க முடியாது.
சிறிலங்காவில் மத வழிபாட்டு இடங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அத்தகைய வன்முறை நடவடிக்கைகளை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளமாட்டாது.
காணாமற்போனோர் பற்றியும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் வழங்குவது குறித்தும் ஆணைக்குழு விசாரணைகளின் பின்னர் ஒரு முடிவு எடுக்கப்படும்.
ஒருசில நாடுகளின் சார்பில் வெளிநாடுகள் சில சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
மனிதஉரிமை விவகாரம் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
'யார் சம்பந்தம்' என்று கொஞ்ம் விளக்கமாக சொன்னால்........!!!!
ReplyDeleteஜீ.எல்.பீறிஸ் எப்பவோ இயறந்துவிட்டார்,என்னைப்பொருத்தவரைக்கும் இவர் தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த வெடிகுண்டில் அப்போ காயப்பட்டார்,அதோடு இவரது உண்மையான தண்மைகளும் இறந்து விட்டது.போற்றத்தக்களவில் இவரது அரசியல் அறிவுகள் அப்போதிருந்தது,ஆனால் இப்போ எல்லோரையும்போல இவரும் ஒரு சராசரி அரசியல் வாதியாக ஏலம் போய்விட்டார்.
ReplyDeleteஉடைக்கப்பட்ட பள்ளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் தொடெர்பில்லை என்றால்,உடைத்தர்வர்களை கைது செய்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டியது ஒரு அரசின் கடமையில்லையா?இதுவே,ஏதும் சிங்கள இனத்திற்கு எதிராக ஒரு பிரச்சினை வந்திருந்தால்,இதே அரசு சும்மாவும் இருந்திருக்காது என்பதே உண்மை.
பாரபட்சமுள்ள இந்த இனவாத அரசு முடுவுக்கு வரவேண்டும் என்பதே சின்னஞ்சிறார்களின் வேண்டுகோளும்கூட.ஏனெனில்,வீட்டில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கும் பெற்றோர் தங்களது கஷ்டத்திற்கான காரணங்களை பிள்ளைகளுக்கு சொல்லியும் வளர்க்கிறார்கள்.அதுதான் மகிந்தவின் சிந்தனை என்பது.