Header Ads



கல்முனை மாநகர சபைக்கு கழிவகற்றி இயந்திரம்


உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால கல்முனை மாநகர சபைக்கு 35 லட்சம் ரூபா பெறுமதியான கழிவகற்றி இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதனைக் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (05-03-2014) காலை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பரிடம் குறித்த இயந்திரத்திற்கான ஆவணங்களைக் கையளித்தார்.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்- பொறியியலாளர் எம்.நஸீர், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.


No comments

Powered by Blogger.