Header Ads



அரசியல் கட்சிகளில் மூன்றாவது அரசியல் சக்தியாக சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி


தென்னிலங்கை அரசியல் கட்சிகளில் மூன்றாவது அரசியல் சக்தியாக சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி உருவெடுத்துள்ளது. நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபை முடிவுகள் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மேல் மாகாண சபையில் 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் தென் மாகாண சபையில் மூன்று ஆசனங்களை கைப்பற்றி மொத்தமாக 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

மேல் மாகாணத்தில் ஆளும் கட்சி 56 ஆசனங்களை கைப்பற்றியதுடன் ஐக்கிய தேசியக் கட்சி 28 ஆசனங்களை கைப்பற்றியது.

இந்த கட்சிகளுக்கு அடுத்தப்படியாக 9 ஆசனங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. தென்னிலங்கையில் இதுவரை மூன்றாவது அரசியல் சக்தியாக இருந்து வந்த ஜே.வி.பி தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.