Header Ads



சவூதி அரேபியாவுக்கு நன்றி சொல்கிறது இலங்கை - விரைவில் மஹிந்தவின் கடிதமும் செல்கிறது

ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சவூதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், பெருபான்மை சிங்களவர்கள் மற்றும் சிறுபான்மை தமிழர்களுக்கு இடையிலான பிரச்சினைகளில் சவூதி அரேபியா முக்கிய ஆதரவு வழங்கிமை தொடர்பிலும் இலங்கை அந்நாட்டை பாராட்டியுள்ளதாக அரபு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் கடந்த வாரம் நடைபெற்ற இலங்கைக்கு எதிராக வாக்கெடுப்பில் சவூதி முக்கிய ஆதரவை வழங்கியதாக சிரேஷ்ட அமைச்சர் எம்.எச்.எம்.பௌசி கூறியுள்ளார்.

இந்த நிலையில், சவூதி அரேபிய ராஜ்ஜியம் சகல சர்வதேச அரங்குகளிலும் இலங்கைக்கு ஆதரவளித்து வந்துள்ளதாக அமைச்சர் பௌசி கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு நாடுகளும் பயங்கரவாத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கை மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டது. இதனால் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் நல்லிணக்க முயற்சிகளுக்கான முனைப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் நன்றி தெரிவிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கடிதத்தை சவூதியின் ஆட்சியாளரிடம் கையளித்த இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் விரைவில் சவூதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார் எனவும் அமைச்சர் பௌசி குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்ததுடன் 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இலங்கைக்கு சார்பாக வாக்களித்ததுடன் இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

எவ்வாறாயினும், 23 நாடுகள் ஆதரவு வழங்கியதுடன் அதற்கு ஒப்புதல் அளித்தன.

6 comments:

  1. இவர்களெல்லாம் வாக்களித்தும் என்ன பயன்?நடக்கவிருந்தது நடந்தே ஆனது.இலங்கை,பர்மா போன்ற முளிம்களுக்கு முதல் விரோதிகள்,இந்த முஸ்லிம் நாடுகள்தான் என்பதையும் பௌஸி சொல்லியிருக்க வேண்டும்.

    இலங்கைக்கெ எதிரான பிரேரனை ஒருவேளை தோற்றிருந்தால்,மறுகணமே சிறுபாண்மை மக்களின் பல வணக்கஸ்தலங்கள் பகிரங்கமாக உடைக்கப்பட்டிருக்கும்,எதைப்போல?தேர்தல் வெற்றியை நம்மவர்,எதிர்க்கட்சினருக்கு அடாவடி செய்து கொண்டாடுவதுபோல.

    ReplyDelete
  2. ஏன் BBS இன் தலைவர் நன்றிதெரிவிக்கக் கூடாது ...??

    ReplyDelete
  3. Who are you to thanks? You could not stop any of attacks on Mosques and Muslim communities in Sri Lanka. Please stop kissing Mahinda's back or get loss. Dont bullshit!

    ReplyDelete
  4. சவுதியெல்லாம் அரேபிய நாடுதான். ஆனால் இஸ்லாமியர்கள் அங்கு இல்லையே.

    ReplyDelete
  5. நீங்க என்னதான் நன்றி சொன்னாலும் முஸ்லிம்களை ஆதரித்து நடக்கும் வரை நன்றி கெட்டவர்கள்தான். அதேசமயம் முஸ்லிம்களின் பொறுமை உங்கள் தோல்விக்கு பகிரங்கமான எச்சரிக்கையேதான் அனைத்துக்கும் எம்மைப்படைத்தவனே பதில் சொல்வான்.

    ReplyDelete
  6. iஇலங்கைக்கு சஊதி அராபியா கடமைப்பட்டுள்ளது என்று ஞானசாரேர் கூறவேண்டும் என்கிறீர்களா ?

    ReplyDelete

Powered by Blogger.