சவூதி அரேபியாவில் இந்தியர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம்
இந்திய வெளியுறவுத்துறை சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் சவூதி அரேபியாவில் வாழும் 14 லட்சம் இந்தியர்கள் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் சுமார் 14 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் "மகாத்மா காந்தி பிரவாசி சுரக்ஷா யோஜனா' என்ற புதிய திட்டத்தை வெளியுறவுத் துறை அமைச்சகம் தீட்டியுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தை சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் பெயஸ் அகமது கித்வாய் துபையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தில் இலவசக் காப்பீடு, முதிய வயதில் ஓய்வூதியம் போன்ற சலுகைகள் அடங்கும்.
What about the SL govt? Does it take care of its citizens? Even many atrocities and wrong-doings happened, our govt kept silence and play like a nice guy!
ReplyDeleteIn fact, our own govt is our enemy.