இந்த அமைச்சர்களுக்கு மூளையில்லையாம்..!
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச போன்றவர்களுக்கு மூளையில்லை என மீன்பிடி வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம தொடர்பில் ஆறு அமைச்சர்கள், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தனர்.
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, நவீன் திசாநாயக்க, திஸ்ஸ விதாரண, ராஜித சேனாரட்ன, ரெஜினோல்ட் குரே ஆகியோர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தனர்.
அமெரிக்க ஆதரவு நாடுகளின் தீர்மானம் இலங்கைக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். எனினும், இந்த எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சில அமைச்சர்கள் மேற்குலக நாடுகளின் அடிவருடிகளாக செயற்படுவதாகவும் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் பற்றியே விபரித்திருந்தோம். இந்தக் கடிதம் புத்தியுடையவர்களின் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. புத்தியில்லாதவர்கள் இது குறித்து கவலைப்படத் தேவையில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சரியாகாத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.மூலை இருந்திருந்தால்,இந்த விமல் வீரவன்ச அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்னால் சில காடயர்களை கூட்டிக்குகொண்டு அர்ர்ப்பாட்டம் செய்து,இலங்கைக்கு எதிரான அமெரிகாவின் தீர்மானங்களை எடுப்பதில் மிகமுக்கிய காரணகர்த்தாவாக இருந்திருக்க மாட்டார். எனவே,இவருக்கு மூலை இருக்கு ஆனால் வேலை செய்யுதில்லை.
ReplyDelete