கல்முனை கமநல சேவை மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்யும் வேலை திட்டம்
(யு.எம்.இஸ்ஹாக்)
ஒளிரும் கல்முனை வேலை திட்டத்தின் கீழ் கல்முனை தொகுதியில் உள்ள கமநல சேவை மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்யும் வேலை திட்டம் இன்று 07.03.2014 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது .
கல்முனை ,சாய்ந்தமருது,சேனைக்குடி , ஆகிய கமநல சேவை மத்திய நிலையங்களினதும் இந்நிலயங்களுகுட்பட்ட நெற்காணி களினதும் அபிவிருத்திகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டம் இன்று சாய்ந்தமருது கமநல சேவை மத்திய நிலையத்தில் மாவட்ட பதில் விவசாய உதவி ஆணையாளர் பாரி மௌலானா தலைமையில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி தொடர்பாக வசாய திணைக்கள அதிகாரிகளுடனும் விவசாய பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சு நடத்தினார்.
கடந்த கால ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக் காலத்தைப் போலல்லாது மகிந்த அரசாங்கம் விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து செயல் படுகின்றது. இவ்வாறான நிலையை பயன் படுத்தி எம்மால் விவசாயிகளுக்கு உதவ கூடிய வசதியை மகிந்த அரசாங்கமும் விவசாயத்துக்குப் பொறுப்பான அமைச்சும் ஏற்படுத்தி தந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அங்கு உரையாற்றும் போது தெரிவித்தார் .
Post a Comment