அக்கரைப்பற்று முகம்மதிய ஜூனியர் வித்தியாலய மாணவர்களது விளையாட்டு போட்டி நிகழ்வு
(அனாசமி)
அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அக்கரைப்பற்றுக் கோட்டப் பாடசாலையான முகம்மதியா ஜூனியர் வித்தியாலத்தில் கல்வி பயிலும் ஆரம்பக்கல்வி வகுப்பு மாணவர்களின் விளையாட்டு போட்டி நிகழ்வுகள் வெகு விமர்சையாக இன்று (201.03.20) அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மாணவர்களின் பெற்றோர்கள், முன்னிலையில் வித்தியாலய அதிபர் எம்.எச். பதுறுதீன் தலைமையில் வித்தியாலய ஆசிரியர்களது முழுமையான பங்களிப்புடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு நடைபெற்றன. மாணவர்கள் அனைவரும் பங்குபற்றக் கூடியவாறு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. கல்வியமைச்சின் புதிய சுற்றுநிருபத்திற்கு அமைவாக ஆரம்பக்கல்வி மாணவர்களினது உடலியக்கச் செயற்பாடுகள், செயற்பட்டு மகிழ்வோம் எனும் பாடத்தினைத் தழுவியவாறு நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
அக்கரைப்பற்று முகம்மதியா ஜூனியர் வித்தியாலயம் கடந்த 2012ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பாடசாலையாகும். இங்கு தரம் ஒன்று தொடக்கம் தரம் மூன்று வரையில் வகுப்புக்களில் சுமார் 320 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த 320 மாணவர்களும் இன்று நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்குபற்றக் கூடியவாறு போட்டி நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். முகம்மதியா விளையாட்டுக் கழகத்தினர், பாடசாலையின் அபிவிருத்தி அமைப்பினர், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்ட இறுதி நிகழ்வின் போது அக்கரைப்பற்று கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஐ. அப்துல் கபூர் விசேட அதிதியாகவும், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன், நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.
படங்களில் : மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள் சிலவற்றையும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்று பரிசுப் பொதிகள் போன்றவற்றை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அப்துல் கபூர், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் ஆகியோர் வழங்கிவைப்பதையும் படங்களில் காணலாம்.
Post a Comment