Header Ads



ஜெனீவாவில் முஸ்லிம் நாட்டு பிரதிநிதிகளுடன் இலங்கை தரப்பு சந்திப்பு

ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று 20-03-2014 முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இம்முறை மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாக முஸ்லிம் நாடுகளுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

அமைச்சர் மகிந்த சமரசிங்க, கடந்த சில தினங்களாக ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.


No comments

Powered by Blogger.