Header Ads



ஜனாதிபதி மஹிந்தவின் கடமைக்காக காத்திருக்கும் முஸ்லிம்கள்..!

(மக்கீன் புஹாரி)

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்காக சவுதி அரசாங்கத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் உள்ள நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தை நம்பி சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். சுமார் 550 கோடி ரூபா நிதியில் 2007 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இவ்வீடமைப்புத் திட்டம் இதுவரையில் மக்களிடம் கையளிக்கப்படாமல் பாழடைந்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றது.

இவ்வீடமைப்புத்திட்டம் முற்றுமுழுதாக முஸ்லிம் மக்களுக்காக இஸ்லாமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இவ்வீடமைப்புத்திட்டமானது 500வீடுகளையும், ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலை, பள்ளிவாசல், வைத்தியசாலை, நூலகம், பொதுச்சந்தை, கலாச்சார மண்டபம், பேரூந்து நிலையம் என்பனவற்றை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வீடமைப்புத்திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட இருந்த வேலையில்தான் பெரும்பாண்மையின பௌத்த தீவிரக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சி உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து மூவின மக்களுக்கும் இவ்வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என கோரிய போது மூவின மக்களுக்கும் இவ்வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்தது.

ஆனால் இவ்வீடமைப்புத்திட்டத்திற்கு உதவி வழங்கிய சவுதி அரேபியா அரசாங்கமானது இவ்வீடுகள்; முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. காரணம் இவ்வீடமைப்புத்திட்டம் முற்றுமுழுதாக முஸ்லிம் மக்களுக்காக இஸ்லாமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கபட்டிருப்பதனாலாகும். 

இன்று இவ்வீடமைப்புத்திட்டம் பாழடைந்து புற்கள் அடர்த்தியாக வளர்ந்து காட்சியளிக்கின்றது. தற்போது எவரும் பயன்பெறாத ஒரு காட்சிப்பொருளாக மட்டுமே தெரிகிறது. கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என்பன நடத்தியும் கூட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் இம்மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். 

· ஏன் இதனை சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக வழங்கப்படவில்லை என்பது ஒரு புதிறாகவேயுள்ளது. 

· முஸ்லிம் மக்களுக்காக கட்டப்பட்ட இந்த வீடுகள் அவர்களுக்கே வழங்கப்படவேண்டும். 

· சிங்கள தமிழ் மக்களுக்காக இதற்கு அருகாமையில் அவர்களின் கலாச்சார விழுமியங்கள் அடங்கிய வீடமைப்புத்திட்டங்களை அரசாங்கத்தினால் ஏன் அமைக்கமுடியாது?

· உயர் நீதிமன்றத் தீர்ப்பினை இலங்கை அரசாங்கம் மதிக்கவேண்டும் கட்டுப்பட வேண்டும் என்றால் ஏன் பெற்றோலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டும்; என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பினை இந்த அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

· எங்களுக்காக கட்டப்பட்ட இந்த வீடுகளை இனியாவது எங்களிடம் கையளிக்கப்படுமா? முஸ்லிம் அரசியல் தலைமைகள் இவ்விடையத்தில் ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள்..

ஜனாதிபதி அவர்களே.......     உங்களின் கடமைக்காக காத்திருக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்.


3 comments:

  1. ஜனாதிபதிக்கு வக்காலத்து வாங்கி கரையோரம் முழுதும் ஆர்ப்பாட்டங்கள் செய்யலாம்,ஆனல் தங்களது உரிமைகளை வென்றெடுக்க அதே ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்ய முடியாது? நடத்துங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete
  2. எங்கப்பா இந்த ஊரின் மகான் அக்கரைறாப்த்தை கட்டி காக்க பிறந்த அதாவுல்லா
    எங்கயோ இருக்குற ஊர் பிரச்சினைல்லாம் முடிக்கா போகிறாரு சொந்த ஊர் பிரச்சினை முடிக்க முடியாத ? வோரை கட்சி தலைவர்களோ பிரதிநித்களோ உங்க ஊர்ருக்கு வந்தால் விறட்டுறிங்க ! அபோ உங்கள்ள கட்டி காக்க பிறந்த அதாவுல்லா தன்னா இந்த பிரச்சினையா முடிக்கனும், அவர்தான் இந்த பிரச்சினையா ஆரம்பம் செய்தவரும்கூட

    ReplyDelete
  3. Engappa ungada thalaivar? Ini Election wanthaathan waruvaaroooooooo?
    Vote panna avaru, Work panna ivaraaaaaaaaaaaaaaaaa?

    ReplyDelete

Powered by Blogger.