Header Ads



'இலங்கையில் மின்சாரம் தாக்கி இறப்போர் தொகை மிக அதிகம்'

மின்சக்தியை சட்டவிரோதமாக பெற்றுக்கொள்வதற்கான  நடவடிக்கைகள்,  பாதுகாப்பற்ற  நடைமுறைகள்,  கவனக்குறைபாடு  என்பவற்றால் மின்சாரத்தால்  தாக்குண்டு அதிக எண்ணிக்கையானோர்  இலங்கையில்  மரணமடைவதாக  இலங்கை பொதுவசதிகள்  ஆணைக்குழுவின்  பரிசோதகப் பணிப்பாளர்  நிலாந்த  சபுமானகே தெரிவித்திருக்கிறார். 

இலங்கை வர்த்தக சம்மேளனம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த  மாநாடொன்றின்  போதே  அவர் இதனைத் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தொடர்பாக பாதுகாப்புடைய நாட்டினராக நாங்கள் இல்லை.  மின்சாரம் தாக்கி  ஆட்கள் மரணமடைந்து  கொண்டிருக்கின்றனர்  என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

20 மில்லியன் மக்கள் தொகைகொண்ட  நாட்டில் 90 சதவீதமானோர் மின்சாரத்தைப்  பயன்படுத்துகின்றனர்.  2010 இல்  இம் மின்சாரத்தால்  தாக்கப்பட்டு 134 பேர் இறந்துள்ளனர்.  2011 இல்  180 ஆக இறப்புகள் அதிகரித்திருந்தன. "பாதுகாப்பான மின்சார' வசதிகொண்ட  நாடுகளுடன்  ஒப்பிடுகையில் இந்த மரணங்கள் 10 மடங்கு அதிகமாகும். பொதுமக்கள்  மத்தியில்  விழிப்புணர்வை ஏற்படுத்தும்  செயற்பாட்டுத் திட்டங்களினால் 2013 இல் மின்சாரத்தால்  தாக்கப்பட்டு இறந்தவர்களின்  எண்ணிக்கை 73 ஆக குறைவடைந்திருப்பதாக  பொதுவசதிகள் ஆணைக்குழு  கூறுகிறது. 

வவுனியா , கண்டி மாவட்டங்களிலேயே மின்சாரம் தாக்கி  இறப்போர் தொகை அதிகமெனத் தெரிவிக்கப்படுகிறது. கண்டியில்  வனவிலங்குகளைக்  கொல்வதற்கும்,  பயிர்ச்செய்கைகளைப் பாதுகாப்பதற்கும், வவுனியாவில்  மின்சக்திக்காகவும்  சட்டவிரோதமாக மின்சக்தியைப் பயன்படுத்துகின்றனர். என்று கூறியுள்ளார். வீடுகள், வேலைத்தளங்களில்  உரிய முறையில் மின் இணைப்புக்களை மேற்கொள்ளாமலிருப்பதே  விபத்துக்கள்  ஏற்படுவதற்கு  காரணமாகுமெனவும் அவர் கூறியுள்ளார்.  தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களைக் கொண்டு மின்சார இணைப்பை மேற்கொள்ளாமை,  தரம் குறைந்த உபகரணங்களை பொருத்துகின்றமை போன்றவையும் விபத்துக்கு  வழிவகுப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

No comments

Powered by Blogger.