Header Ads



யாழ் முஸ்லீம்களின் கல்வி தொடர்பான விசேட கூட்டம் - தீர்மானம் எதுவுமின்றி கலைந்தது

யாழ் முஸ்லீம்களின் கல்வி தொடர்பான விசேட கூட்டம் வாதப்பிரதிவாதத்திற்கு மத்தியில் தீர்மானம் எதுவுமின்றி கலைந்து சென்றதை காணமுடிந்தது.

யாழ். மாவட்ட முஸ்லிம்களின் கல்வி நிலைகள் தொடர்பாக யாழ். ஒஸ்மானியா கல்லூரி,  யாழ் கதீஜா கல்லூரி மீளத்திறப்பு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தி.குருகுலராஜா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மண்டபத்தில்  இன்று நடைபெற்றது.

இதன்பொது  மேற்படி நிகழ்விற்கு யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் கல்வியியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள்  அரசியல்வாதிகள் உட்பட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதன்போது மேற்படி விடயம் சம்பந்தமாக கருத்துரை தெரிவிக்க இங்கிருந்தவர்கள் அழைக்கப்படடனர்.

இதன்போது இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.சி.எம் முபீன் ,யாழ் மாநகர சபை உறுப்பினர் மௌலவி ஏ.சி.எஸ் சுபியான் ,சமூக சேவகரும் கே.கே.எஸ் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.சியானாஸ், கல்லூரியின் பழைய மாணவர் முஜாஹித் ஆகியோர் தற்போதைய நிலையில் ஹதீஜா கல்லூரி மீள் திறப்பு அவசியமில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன் தற்போதைய ஒஸ்மானியா கல்லூரி அதிபரின் செயற்பாடு தொடர்பில் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் த.குருகுலராஜாவிடம் ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதன் காரணமாக சற்று பதற்றமான நிலை அங்கு தோன்றியது.

இது தவிர மாகாண சபை உறுப்பினர் ஜயூப் அஸ்மீன் உரையாற்றிக்கொண்டிருந்த வேளை அவையில் இருந்த ஒருவர் திடிரென எழுந்த தாக்க முற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ் கிளிநொச்சி உலமா சபை தலைவர் மௌலவி அஸீஸ் காசிமி,யாழ் மாநகர சபை பிரதிமேயர் சட்டத்தரணி எம்.எம்.எம்.ரமீஸ்,ஏ.சி.எம் இனானுன் ஆகியோர் கதீஜா பெண்கள் பாடசாலையின் மீள ஆரம்பித்தலின் அவசியம் பற்றியும்,அதனால் சமூகத்திற்கும்,இஸ்லாத்திற்கும் உள்ள நன்மைகளை சுட்டிக்காட்டினர்.

எனினும் இவ்வாறான வாதப்பிரதிவாதங்களினால் இந்நிகழ்வின் முடிவு அறுதியாக எட்டப்படவில்லை.

மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் மீள அமைக்கப்படும் கதீஜா பெண்கள் கல்லூரி,யாழ் ஒஸ்மானியா கல்லூரி ஆகியவற்றின் பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் மீள கட்டமைக்கும் குழுவினை சுயாதினமாக சமூக நலன் கருதி உருவாக்க வேண்டும் என கல்வி அமைச்சரை அடிக்கடி வேண்டிக்கொண்டதை காண முடிந்தது.



No comments

Powered by Blogger.