மீளக்குடியேறிய மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவு மக்கள் காணி இன்றி திண்டாட்டம்
(அபூ றிஜா)
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மறிச்சிக்கட்டி மரைக்கார் தீவு கிராமம் நூறு வருடங்கள் பழமை வாய்ந்த கிராமமாகும். இக்கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் புத்தளம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் இடைத்தங்கள் முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.
எமது இலங்கை நாட்டில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் சுமுகமான சூழல் காரணமாக மரைக்கார் தீவு மக்கள் தங்களது காணியில் குடியமருவதற்காக தங்களது கிராமத்திற்கு வந்த போது அப்பிரதேசம் காடுகளாகவும் மற்றும் சில பிரதேசம் இலங்கை கடற்படையினராலும் கைப்பற்றப்பட்டு இருந்ததை காணமுடிந்தது.
இவை தொடர்பாக முசலி பிரதேச செயலாளர் அவர்களிடம் மறிச்சிக்கட்டி மரைக்கார் தீவு மக்கள் தங்களது காணி தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டது. அதன்பிறகு மரைக்கார் தீவு மக்கள் தங்களின் காணிகளை காடழிப்பு செய்து குடியிருக்கும் நேரத்தில் இக்காணி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான காணி என கூறிவருகின்றனர். இதனால் மரைக்கார் தீவு கிராம மக்கள் காணியின்றி குடியமர முடியாத நிலையில் இருப்பதாகவும் தாங்கள் இன்னும் அகதிகளாகவே இருப்பதாகவும் இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவு மக்கள் தங்களது காணிகளில் குடியமருவதற்கு எதிர்வரும் 09.03.2014 அன்று வருகை தருவதாக கூறுகின்றனர். இதனால் இக்கிராம மக்கள் அரச அதிகாரிகளினதும் மற்றும் அரசியல் தலைமைகளினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றனர்.
Post a Comment