Header Ads



கோமா நிலையிலிருக்கும் ரவூப் ஹக்கீம், தேர்தல் வந்து விட்டால் விழித்துக்கொள்கிறார் - அசாத் சாலி


(Gtn) எப்போதுமே கோமா நிலையிலிருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தேர்தல் வந்து விட்டால் விழித்துக்கொள்கிறார். சிறீலங்கா  முஸ்லிம் காங்கிரஸும் ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் அந்த கட்சிகளுக்கு போக்கிடம் கிடையாது. தொற்றிக் கொள்வதற்கு இடம் இல்லை என்று மத்திய மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமது மாகாண சபை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியின்  ஆவணக் கோவைகளை பிரதிநிதிகளுக்கு  பகிர்ந்தளித்த போதே ஊடகவியலாளர்களிடம்இவ்வாறு தெரிவித்தார் அசாத்சாலி.

அண்மையில் மாளிகாவத்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் பேசும்போது பொது பலசேனாக்களுக்கு இவ்வளவு அதிகாரங்களை கொடுத்தவர்கள் யார் என கேள்வியெழுப்பினார்.

இவ்வாறான  கேள்விகளை அமைச்சரவை அமைச்சராக இருக்கும் அவர் அமைச்சரவையில் அல்லவா கேட்க வேண்டும். அதனை விடுத்து மக்களிடத்திலா கேட்பது?

17 ஆவது திருத்தச்சட்டத்தை தான் ஆதரித்ததன் மூலம் ஜனாதிபதிக்கு வாழ்நாள் பூராகவும் ஜனாதிபதியாகவிருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ரவூப் ஹக்கீம் கூறி வந்த போதும் மாகாண சபை தேர்தல்களில் செல்வாக்குகளை இழந்து வருகின்றார் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.