Header Ads



ரவுப் ஹக்கிமும், ஞானசார தேரரும் நாடகம் நடிக்கின்றனர் - கபீர் ஹசீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் பொதுபல சேனா அமைப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் அலரி மாளிகையினால் உருவாக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி நாடகம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று 24-03-2014 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸூக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது முற்றும் முழுதான நாடகமாகும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டே அரசாங்கத்தின் மீது குறைக்கூறி வருகிறார்.

அதில் இரண்டு முக்கிய கதாபாத்திரமாக ரவுப் ஹக்கிமும், கலகொட ஞானசார தேரரும் நடிக்கின்றனர்.

ஞானசார தேரர் கூறுகிறார் இந்த அரசாங்கத்தை நாங்களே நிலைபெறச் செய்கிறோம் என்று கூறுகிறார்.

அதைப்போன்று அமைச்சர் ரவுப் ஹக்கிமும் எங்கள் வாக்கு பலம் இல்லாமல் இந்த ஆட்சியை கொண்டுச் செல்ல முடியாது என்று கூறுகிறார். அது உண்மைதான் பிரிவினைவாதிகளுடன் இணைந்து தங்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்யும் எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு இவர்கள் தயங்குவதில்லை.

தேர்தல்கள் நடத்தப்படும் காலங்களில் மாத்திரம் இருத் தரப்புக்கும் இடையில் இந்த முரண்பாடு ஏற்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகவே ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்திற்கு சென்றார். உண்மையில் அவர் இருக்க வேண்டியது எதிர்க்கட்சியில் எனவும் கபீர் ஹசீம் குறிப்பிட்டார்.

2 comments:

  1. உண்மையை கண்டுபிடித்த உன்னத தலைவர்...? இவரது தலைவர் (ரணில் விக்கிரமசிங்க) ஆழும் கட்சியுடன் 'நாடகம்' நடிப்பது இவருக்கு தெரியாதா என்ன் ...?

    ReplyDelete
  2. There are lot of issues in Mawanella such as Dewanagala Issue & Latest BBS Issue.....Kabeer Hashim representing from Mawanella and he never ever open his mouth......He is suitable for critisizing others and I'm not telling Hakeem is good.....Compairing to Kabeer Hashim; Hakeem is far batter.

    ReplyDelete

Powered by Blogger.