அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் செயன்முறைக் கண்காட்சி
(எம்.ஏ.றமீஸ்)
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர்களின் வழிகாட்டலில் மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட செயன்முறைக் கண்காட்சி நேற்று(06) கல்லூரியின் விஞ்ஞானகூடத்தில் இடம்பெற்றது.
அதிபர் மௌலவி வி.ரி.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
பாடசாலையில் விஞ்ஞானப் பாடத்தில் மேற்கொள்ளப்பட்ட செயன்முறைப் பயிற்சிகளுக்கமைவாக மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இக்கண்காட்சியின்போது தரம் 06 முதல் 11 வரையான வகுப்புகளில் மாணவர்கள் பாடத்திட்டத்திற்கமைவாக கற்றுக்கொண்ட விடயங்கள் செயன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன.
கண்காட்சிக் கூடத்தினை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தனர். இக்கண்காட்சியினை எதிர்வரும் புதன்கிழமை வரை மாணவர்கள் பாடசாலை நேரத்தில் கண்டு களிக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Post a Comment