அம்பாறையிலிருந்து கொழும்பு வந்து, ஜெனீவா பிரேணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இன்று காலை கிழக்கு மாகாண சிவில் பிரஜைகள் அமைப்பினர் அம்பாறை மாவட்டத்தில் இருந்து 3 பஸ்கள்; முலம் கொழும்பு வந்து தமிழ் மக்கள் இலங்கைக்கு எதிராக ஜெனிவா முன் வைக்கப்படுகின்ற பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள். அத்துடன் கொழும்பு நகரமண்டபத்தில் இருந்து நடைபவணியாக இம் மக்கள் ஜக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகத்திற்குச் முன்பு சென்று தமது எத்ர்ப்புக்களை தெரிவித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து காலிவீதியாக நடைபவணியாக வந்து கொள்ளுப்பிட்டியில் உள்ள அமேரிக்க தூதுவர் ஆலயத்தை அடைந்தனர். இப் பிரஜைகளின் ஏற்பாட்டாளர் சீலன் என்பவர் அமேரிக்க தூதுவர் ஆலயத்தின் அதிகாரி ஒருவரிடம் ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டுள்ள தீர்மாண்த்திற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் கொண்டுவந்த அறிக்கையையும் கையளித்தார்.
இக் கூட்டத்தில் புனர் வாழ்வுபெற்ற விடுதலைப்புலிகளின் வைத்தியராக செயல்பட்ட ஒருவர் கருத்து தெரிவித்தார் - தமிழர்களாகிய நாங்கள் இலங்கையில் மிகவும் அமைதியாகவும், சமாதாணமாகவும் வாழ்ந்து வருகின்றோம். கடந்த காலத்தில் யுத்தத்தில் இங்கு வாழும் மக்களே மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கினோம். ஆன்hல் வெளிநாடுகளில் மிகவும் சொகுசாக வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களே இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பல அபிவிருத்தித் திட்டங்களை எமக்கு செய்து தருகின்றார். மிகவும் விரிவாக கொழும்பு வந்தோம். ஜனாதிபதியின் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும். நாங்கள் அவருக்கு சார்பாகவே இங்கு வந்துள்ளோம். ஏனத் தெரிவித்தார்.
திருக்கோவில் கோவிலில் அகதியாக வாழ்ந்து வந்த வயோதிப பெண்ஒருவர் அங்கு ருபவாஹின தொலைக்காட்சிக்கு குரல் தருகையில்,
எனக்கு வீடு இல்லை- நான் இப்ப திருக்கோவிலில் உள்ள கோவிலில் அகதியா வாழந்து வருகின்றேன். எனது வீட்டையும் எங்களையும் அம்பாறையில் இருந்து சிங்கள மக்கள் துறத்தி விட்டார்கள். அந்த இடத்தையும் அவர்கள் பிடித்துவிட்டார்கள். இன்று கொழும்புக்கு அழைத்து வந்து ஜனாதிபதியிடம் வீட்டைக் கேள் என்றுதான் அழைத்து வந்தார்கள் என அப் பெண் தெரிவித்தார்.
ஊடகவியாளர் நீ ஏன் ஜெனிவா பிரேரணைக்கு ஆர்ப்பாட்டம் நடக்குது அதற்குத்தானே வந்தீர்கள் என கேட்டடர் ? இல்லை. கொழும்புக்கு வீடு ஒன்றை பெற்றுக்கொள்ள நீ அரசாங்கத்திடம் நேரடியாக பேசு என்றுதான் அழைத்து வந்தார்கள் எனத் தெரிவித்தார்.
பாவம் பாருங்கள்,எங்கே போகிறோம் என்றுகூட தெறியாமல் இந்த பாட்டியை கூட்டிக்கு வந்து ஏமாற்றியுள்ளார்கள். இழந்த வீட்டை உரிமையோடும் சட்டத்தோடும் மீட்கமுடியாத முள்ளந்தண்டற்ற ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் ஜெனீவாவுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்களா?
ReplyDeleteமேலும் இங்கு பார்த்தால்,புகைப்படத்தில்,சுலோகங்களை தலைகீழாக பிடித்துக்கொண்டிருக்கும் அப்பாவிகளையும் இந்த கூலி ஏற்பாட்டாளர்கள் கூட்டிக்கு சென்றுள்ளார்கள்.
இவர்களுக்கும்,நேற்றைய கல்முனையில் நடந்த இதே மாதிரியான கூலிப்படைக்கும், சிங்கள பேரினவாத இயக்கங்களுக்குமிடையில் என்ன வித்தியாசம்?
வயோதிபப் பெண் என்று பார்க்காமல் ஆசை காட்டி அவ்வளவு தூரம் அழைத்து வந்தது போலதான் மற்றவர்களுக்கும் பல ஆசைகள் காட்டி கூட்டி வந்திருப்பார்கள். இதெல்லாம் அரசாங்கத்தின் கூலிப்படை செய்யும் அராஜகம்.
ReplyDeleteதவளை தன்வாயால் கெடும். இது தவளைகளின் ஆர்ப்பாட்டம்.
ReplyDelete