Header Ads



இணையத்தள பாவனையை கண்காணிக்க விசேட குழு

இலங்கையில் இணையத்தள பயன்படுத்தலை கண்காணிக்க அரசாங்கம் விசேட ஒழுங்குப்படுத்தல் குழுவை நியமித்துள்ளது.
இணையத்தள பாவனை தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தவும் இணையத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் இந்த குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு, கல்வி அமைச்சு, குற்றப்புலனாய்வு திணைக்களம், இலங்கை தகவல் தொழிற்நுட்ப முகவர் நிறுவனம், கலாசார அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றன.

இணையத்தளங்கள் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க 24 மணிநேரம் இயங்கும் ஆலோசனை குழு மேற்படி குழுவின் கீழ் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மக்கள் மத்தியில் இணையத்தளங்கள் பிரபலமாகியுள்ளன. செய்தி இணையத்தளங்கள் மூலமாக அரசாங்கம் தொடர்பான உண்மை நிலைமைகளை மக்கள் அறிந்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

இதன் அடிப்படையிலேயே இந்த புதிய இணையத்தள ஒழுங்குப்படுத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.