Header Ads



'நலத்துடன் நீண்ட ஆயுள் கிட்டவேண்டும்' கல்முனையில் சகாதார வாரம்



(ஹாசிப் யாஸீன்)

சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள 'நலத்துடன் நீண்ட ஆயுள் கிட்டவேண்டும்' எனும் தொனிப்பொருளிலான தேசிய சுகாதார வாரத்தை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் 09-03-2014 இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்தின தேரர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களான ஏ.எல்.றஹ்மான், ஏ.இஸ்ஸதீன், கல்முனை மாநகர பிரதம வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர் மற்றும் வைத்தியர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது போஷாக்கு மற்றும் தொற்றா நோய் பற்றிய விரிவுரையினை டாக்டர் எம்.பஷால் நிகழ்த்தினார்.


No comments

Powered by Blogger.