கொம்பனி வீதி - ஜாவா லேன் பள்ளிவாசலை சவூதி அரேபிய குழுவினர் பார்வையிட்டனர் (படங்கள்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமத் ஆகியோர் சவூதி அரேபிய முக்கியஸ்தர்களுடன் வெள்ளிக்கிழமை (07) ஜூம்ஆத் தொழுகையை கொம்பனி வீதி, ஜாவா லேனில் அமைந்துள்ள 150 வருடங்கள் பழமை வாய்ந்த மஸ்ஜிதுல் ஜாமியாவில் நிறைவேற்றினர்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், கொம்பனித் தெருவை சேர்ந்தவருமான அனஸூம் அந்தப் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வந்திருந்தார்.
இந்தப் பள்ளிவாசலை சுற்றியிருந்த குடியிருப்புகள் தற்பொழுது முற்றாக அகற்றப்பட்டுள்ள நிலையில, பள்ளிவாசல் மட்டும் அங்கு எஞ்சியிருக்கிறது. இந்தப் பள்ளிவாசல் வெள்ளையர்களால் மலேஷியாவிலிருந்து இங்கு அழைத்து வரப்பட்டு இராணுவத்தில் பணிபுரிந்த முஸ்லிம்கள் 1864 ஆம் ஆண்டு நிர்மாணித்திருந்தனர். இது இராணுவப் பள்ளிவாசல் என அழைக்கப்பட்டது.
AEDIR KAALATTIL IPPRADEASATTIL MAADI VEEDU KATTAPPATTU INA V I KIDAASAARAPPADI IRUNDAWARKLUKKU APPADIYEE VEEDUKALAI KODUTTUVITTU AENAYA MAADIKALIL PEARUMPAANMAI SAMUKA SAKOODARAR KALAI KUDI ERUTTI PALLIKKU PAKKATTEEI ORU PANSALAYUM WANDAAL ERUENATTAARUM AWWALAWU OTTUMAYAAKA TATTAMADU WANKKANGALAI SAIWAARKAL ALLA PEARIYAWAN PORUTTIRUNDU PAARPPOME
ReplyDelete