Header Ads



ஐக்கிய தேசிய கட்சி மேடையில் முபாறக் மௌலவி

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படக்கூடிய காலம் கணிந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கூறியிருப்பது காலம் கடந்த தேர்தல் ஞானமாகும் என முஸ்லிம் மக்கள் (உலமா) கட்சித்தலைவர் மௌலவி முபாறக் குறிப்பிட்டார்.
கொழும்பு மாளிகாவத்தையில்; நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் முஜிபுர்ரஹ்மானை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறியதாவது,

அமைச்சுப்பதவிகளுக்காக அரசாங்கத்துடன் இணைந்த இந்த முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் எந்தப்பிரச்சினைகளையும் நிபந்தனையாக்கவில்லை என்பதை நாமறிவோம். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் காலத்திலும் அரசுக்கும் ஹக்கீமுக்கும் முறுகல் என்பது போல் காட்டப்பட்டது. தேர்தலின் பின் தீர்க்கமான முடிவை மேற்கொள்வோம் என அன்றும் இதே போல் ஹக்கீம் கூறினார். அதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை அரசாங்கம் இழக்கப்போகிறது என்றே கிழக்கு மக்கள் நம்பினர். அனாலும் நாம் மிகத்தெளிவாக ஒரு விடயத்தை அன்றே கூறினோம். அதாவது ஹக்கீம் இன்னமும் அமைச்சுப்பதவியில் ஒட்டியிருப்பதால் இவர்கள் அரசுக்கே முஸ்லிம்களை அடகு வைப்பார்கள் என கூறினோம். தேர்தல் முடிந்த பின் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அலறி மாளிகையில் புரியாணி சாப்பிட்டார்கள்.

ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் எந்தக்காலத்திலாவது சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்ததாக ஒன்றைக்காட்ட முடியுமா? புலிகளுக்கெதிராக இந்த அரசு போராடிய போது புலிகளுக்கு சார்பாக நின்றார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை இந்த அரசு உடைக்கும் போது அரசுக்கு ஆதரவாளர்களாக நி;ற்கிறார்கள். தேர்தல் வந்தால் அரசை சாடுவார்கள். தேர்தல் முடிந்தால் இந்த அரசாங்கமே நம்மை பாதுகாக்கும்; என கூறுவார்கள். மு. காவின் இத்தகைய நடவடிக்கைகளினால் முஸ்லிம் சமூகம் இன்று வெட்கிப்போயுள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் தலைமை கிழக்குக்கு வெளியே அதுவும் அமைச்சராக இருக்கும் வரை ஒரு போதும் கிழக்கின் ஆட்சியை மாற்ற இவர்கள் முன்வரமாட்டார்கள் என்பதே உண்மையாகும். சில வேளை தான் கிழக்கின் முதலமைச்சராக வந்து கிழக்கானின் வயிற்றில் அடிக்க வேண்டும் என நினைக்கிறாரோ தெரியவில்லை. இவர்கள் அரசாங்கம் இரண்டு உதை விட்டால் த தே கூட்டமைப்புடன் இணையும் காலம் வந்து விட்டது என்பார்கள். அரசாங்கம் இரண்டு மாலைகளை போட்டு விட்டால் அரசின் காலை நக்கிக்கொண்டு இன்றைய சூழலில் நாம் நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது என ஞானம் பேசுவார்கள். அவர் பேசுவது புரியாமல் புரிகிறது என்பதை காட்டுவதற்காக அப்பாவி கிழக்கு முஸ்லிம்கள் கைதட்டுவார்கள்.

கிழக்கில் ஐ தே க, மற்றும் த. தே. கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியிருந்தால் வடமாகாண சபை தேர்தல் நடந்திருக்காது என ஹக்கீம் கூறுவது சிறு பிள்ளைத்தனமான பேச்சாகும். சர்வதேச தலையீடு மூலமே வட மாகாண சபை தேர்தல் நடைபெற்றது எனப்பதைக்கூட புரியாதவராக உள்ளாரா அல்லது தமிழ் மக்கள் முட்டாள்கள் என எண்ணிக்கொண்டு பேசுகிறாரா?

எதிர் காலத்தில் கிழக்கு மக்கள் முஸ்லிம் காங்க்ரசை ஒதுக்கி விட்டு தமது பகுதி தலைமையைக்கொண்ட தனிக்கட்சியை பலப்படுத்துவதன் மூலமே கிழககு மாகாண சபை பற்றிய தீர்க்கமான முடிவுக்கு சுயமாக முன்வர முடியும். அதே போல் கிழக்கில் ஒரு காலையும் தெற்கில் இன்னொரு காலையும் வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசால் தென்னிலங்கை மக்களுக்கும் எந்த விமோசனமும் இதுவரை கிடைத்ததுமில்லை, இனியும் கிடைக்கப்போவதுமில்லை என்பதை கொழும்பு முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக இந்தக்கட்சியினரினதும் அமைச்சர் ரிசாத் தலைமையிலான கட்சியினரினதும் மடத்தனமான அரசியல் செயற்பாடுகளால் தென்னிலங்கை முஸ்லிம்கள் பாரிய இனவெறுப்புக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதை புரிந்து இக்கட்சிகளை முற்றாக நிராகரிக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என கூறினார்.

2 comments:

  1. Politics! Politics! what a politics. Be united ya AAlim:

    ReplyDelete
  2. முதலில் உங்களூக்கென்ரு கொள்கை இருக்கா? உலமா எனும் கட்சி ஆனால் வருடந்த்தொரும் நீங்களே மேடை மார்ரிங்க, நீங்கள் அறீக்கை மன்னன் மட்டும்தான். நீங்கள் என்ராள் யார், உங்கள் கட்சி என்ன என்று முலு கல்முனையும் அறீயும்.

    ReplyDelete

Powered by Blogger.