Header Ads



அதாஉல்லாவிற்கு நன்றி உள்ளவர்களாக, அவருக்கு கைம்மாறு செய்யும் வகையில் செயற்படவேண்டும் - சிராஸ் மீராசாஹிப்


(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் “சாய்ந்தமருதுக்கென ஒரு தனியான உள்ளூராட்சி மன்ற” கோரிக்கையினை சாய்ந்தமருது மக்கள் சார்பில் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் கையளித்து தனது ஆதரவாளர்களுடன் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டதன் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயும் கூட்டம் சிராஸ் மீராசாஹிபின் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.

சிராஸ் மீராசாஹிபின் இல்லத்தில் இயங்கிவந்த மக்கள் பணிமனை  வழமைபோல் மக்கள் பணிக்காக செயற்படுதல், மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கும்வகையில் எமது தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும்  உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் பிரசன்னத்தோடு மக்கள் சந்திப்புக்களை ஏற்படுத்துதல்போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கு சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கையில்,

எமக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்தி தருவதற்காக வாக்குறுதி அளித்து அது தொடர்பில் செயற்பட்டுவருகின்ற எமது தலைவர் அதாஉல்லாவிற்கு நன்றி உள்ளவர்களாக, அவருக்கு கைம்மாறு செய்யும் வகையில் நாம் செயற்படவேண்டும். எமது மூத்த பிரஜைகள் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையினை மிக நீண்ட காலமாக முன்வைத்து வந்தபோதிலும் அதனைப் பெறும் சாத்தியப்பாடு காணப்படவில்லை. ஆனால் இப்போது வட்டார முறை  அமுல்படுத்தப்பட்டிருப்பதும் எமது தலைவர் அதாஉல்லா உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சாரக இருப்பதும் சாத்தியமானதாக அமைகின்றது எனவும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.