Header Ads



வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்கு, ஜனாதிபதி எச்சரிக்கை

(Gtn) வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கைகளை வெளியிடும் போதும் கருத்துக்களை வெளியிடும் போதும் மிகவும் நிதானமான முறையில் வெளிவிவகார அமைச்சு செயற்பட வேண்டுமென அறிவித்துள்ளார்.மிக முக்கியமான வெளிவிவகார கொள்கைகளுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரேய்ன் ரஸ்ய விவகாரம் தொடர்பில் அமைச்சர் பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறைமையுடைய நாடான உக்ரேய்னின் எல்லைப் பகுதிக்குள் உட்பட்ட கிரிமியா குடாநாட்டில் அண்மையில் ரஸ்ய அதிகாரிகள் சர்வஜன வாக்கெடுப்ப நடத்தியிருந்தனர்.இந்த வாக்கெடுப்பில் 98 வீதமானவர்கள் உக்ரேய்னிலிருந்து பிளவடைந்து ரஸ்யாவுடன் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரிய அல்லது பலம்பொருந்திய நாடொன்று சிறிய நாடொன்றின் விவகாரத்தில் தலையீடு செய்வது நியாயமானதே என்ற அர்த்தத்தில் அமைச்சர் பீரிஸ் உக்ரேய்ன் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த விடயம் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உக்ரேய்னின் கிரிமியா தொடர்பில் ரஸ்யா மேற்கொண்டு வரும் தலையீடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதே என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.இந்த கருத்து இலங்கையின் வட மாகாணசபைக்கும் பொருந்தக் கூடியது என்பதனால் ஜனாதிபதி ஆத்திரமடைந்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவுடன் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தால், வட மாகாணசபை விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை விவகாரத்தை உக்ரேய்னுடன் ஒப்பீடு செய்து பலம்பொருந்திய நாடுகள் தலையீடு செய்யக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ரஸ்யா ஆதரவளித்து வரும் நிலையில் , உலக நாடுகளுடனான உறவுகள் குறித்து மிகவும் நிதானமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அண்டை நாடான இந்தியா ரஸ்யாவுடன் மிக நெரு;ங்கிய உறவுகளைப் பேணி வருகின்ற போதிலும் உக்ரேய்ன் பிரச்சினையின் போது மிகவும் ராஜதந்திரமான முறையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.அறிக்கையில் உக்ரேய்ன் பற்றி மட்டுமே குறிப்பிட்பட்டுள்ளது.

எனவே முக்கியமான விடயங்கள் தொடர்பி;;ல் கருத்து வெளியிடும் போது மிகவும் நிதானத்துடன் கருத்து வெளியிடப்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Mr president see ur country have many problem try to stop BBS first,

    ReplyDelete

Powered by Blogger.