Header Ads



உக்ரைனுக்கு அமெரிக்கா ஏவுகணை போர்க்கப்பல் விரைவதால் போர் பதட்டம்..?


ரஷிய ராணுவம் முகாமிட்டுள்ளதை தொடர்ந்து உக்ரைனுக்கு அமெரிக்கா போர்க்கப்பல் விரைவதால் போர் பதட்டம் நீடித்துள்ளது.

ரஷியா அருகே உள்ள உக்ரைனில் அதிபராக இருந்த விக்டர் யனுகோவிச் நீக்கப்பட்டு புதிதாக இடைக்கால அரசு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து யனு கோவிச்சுக்கு ஆதரவாக அண்டை நாடான ரஷியா தனது ராணுவத்தை உக்ரைனின் தன்னாட்சி பெற்ற கிரீமியாவுக்கு அனுப்பியுள்ளது.

கிரீமியாவில் ரஷிய ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். ரஷியா தனது 2 போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. அதன் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவத்தை வாபஸ் பெறும்படி வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ரஷியா தனது ராணுவத்தை அங்கு தொடர்ந்து முகாமிட்டுள்ளது.

இதற்கிடையே உக்ரைனின் கிரீமியா உள்ள கருஙகடல் பகுதியை நோக்கி அமெரிக்காவின் போர்க்கப்பல் ‘யு.எஸ்.எஸ்.டிரஸ்டன்’ விரைந்துள்ளது. இது ஏவுகணை அழிக்கும் கப்பல் ஆகும்.

அக்கப்பல் துருக்கியின் ‘போல்பொரஸ்’ ஜலசந்தியை நேற்று கடந்தது. அதற்கு பாதுகாப்பாக ஒரு படகும் உடன் புறப்பட்டு செல்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை ரஷியாவின் 2 போர்க்கப்பல்கள் இந்த ஜலசந்தியை கடந்து சென்றன. அன்றே உக்ரைனின் போர்க்கப்பலும் புறப்பட்டு சென்றன.

தற்போது அமெரிக்காவின் போர்க்கப்பலும் புறப்பட்டு சென்றுள்ளதால் ரஷியாவுடன் அமெரிக்கா ராணுவம் போர்புரியும் அபாயம் உள்ளது. இதனால் உக்ரைனல் போர் பதட்டம் நிலவுகிறது.

ஆனால் இதை அமெரிக்கா கடற்படை மறுத்துள்ளது. கருங்கடலை ஒட்டியுள்ள பகுதியில் பல்கேரியா, ருமேனியா நாடுகளின் கடற்படையுடன் அமெரிக்க கடற்படை போய்பயிற்சி ஒத்திகை மேற்கொள்கிறது.

அதற்காக கடந்த 21 நாட்களாக அமெரிக்க போர்க் கப்பல் முகாமிட்டுள்ளது. வேறு எந்த காரணமும் இல்லை’’ என அறிக்கை வெளியிட்டுள்ளது.

நார்வேயில் 16 நாடுகளின் ‘நேட்டோ’ ராணுவம் போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதில் 16 ஆயிரம் ராணுவ வீர்கள் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் கிரீமியாவில் ரஷிய ராணுவம் முகாமிட்டுள்ள நிலையில் பதட்டத்தை தணிக்க இங்கு நடைபெறும் போர் பயிற்சி நிறுத்தப்பபட்டுள்ளது.

No comments

Powered by Blogger.