Header Ads



நாடு முழுவதிலும் போலி நாணயத் தாள்கள் - பொலிஸ் எச்சரிக்கை

நாடு முழுவதிலும் போலி நாணயத் தாள்களின் புழக்கம் உயர்வடைந்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதில் அதிகளவில் தென் மாகாணத்தில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் போலி நாணயத் தாள்கள் புழங்குகின்றன.

5000 ரூபா பெறுமதியான 2500த்திற்கும் மேற்பட்ட போலி நாணத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன.

இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

போலி நாணயத்தாள்கள் குறித்து பொலிஸாரிடம் அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு காலப்பகுதிக்குள் 5368 போலி நாணயத்தாள்களை பொலிஸ் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. இதன் பெறுமதி 2 கோடி 48 இலட்சமாகும்.

அதேபோன்று 2014ம் ஆண்டில் இதுவரை 2838 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 14 இலட்சத்து 17 ஆயிரம் ரூபாவாகும். இவற்றில் 426 போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


No comments

Powered by Blogger.