Header Ads



ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகளை மிரட்டுவது போல் உள்ளது - ஒபாமா


சோவியத் யூனியனில் இருந்து தனிநாடான உக்ரைனில், எதிர்க்கட்சிகளின் நெருக்கடி முற்றியதை அடுத்து அதிபர் விக்டர் யனுகோவிச் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து உக்ரைனில் அர்செனி யாத் செனியூக் புதிய பிரதமராகவும், அலெக்சாண்டர் துர்ஷிநோவ் புதிய அதிபராகவும் பதவியேற்றனர். உக்ரைனில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. 

இந்நிலையில், பொது வாக்கெடுப்பு நடத்தி கிரீமியா பகுதி ரஷ்யாவோடு இணைக்கப்பட்டதாக அதிபர் புடின் அறிவித்தார். மேலும், கிரீமியாவில் உள்ள உக்ரைன் படைகளை விரட்டி விட்டு முக்கிய கடற்படை தளம், ராணுவ தளங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றின. உக்ரைன் & கிரீமியா இடையே தொடர்ந்து நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று நெதர்லாந்து சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகளை மிரட்டுவது போல் உள்ளது. ஆனால், சில ஐரோப்பிய தலைவர்கள் ரஷ்யாவுடனான தங்களது பொருளாதார உறவுகள் பாதிக்கப்படும் என்று கவலைப்படுகின்றனர். ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவ முகாம்களை விரிவுபடுத்த முயன்றால் கூடுதல் பொருளாதார தடை விதிக்கப்படு¢ம்Õ என்று எச்சரித்தார். 

இந்நிலையில் ரஷ்யாவுடன் கிரீமியா இணைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கய் லெவ்ரோவ்வும், உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் ஆண்ட்டிரி தெஸ்ட்சியாவும் நேற்று சந்தித்து பேசினர். சந்திப்புக்கு பிறகு ரஷ்ய அமைச்சர் செர்கய் லெவ்ரோவ் நிருபர்களிடம் கூறுகையில், சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினோம். கிரீமியா விவகாரம் சுமுகமாக தீர உக்ரைன் அரசு ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம் என்றார். 

No comments

Powered by Blogger.