Header Ads



அட்டாளைச்சேனை இக்ரஃ வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 'திறமை' எனும் ஆற்றல் வெளிப்பாட்டு நிகழ்வு


(எம்.ஏ.றமீஸ்)

அட்டாளைச்சேனை இக்ரஃ வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 'திறமை' எனும் ஆற்றல் வெளிப்பாட்டு நிகழ்வு நேற்று(21) வித்தியாலய கேட்போர் கூடத்தில் அதிபர் திருமதி எம்.எச்.எம்.அஸ்ஹர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வலயக்கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசிம, கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஏ.அஸ்ஹர், எம்.அபுல்ஹசன், எஸ்.எம்.ஜெமீல், ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஏ.சவுறுதீன், எம்.சம்சுடீன், யு.எம்.நியாஸ், கிழக்கு மாகாண அமைச்சரின் பொதுசனத் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.ஜஃபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளில் திறமை காட்டிய மாணவர்கள் மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் பிரகாசித்த மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலையின் வளர்ச்சிக்காய் அயராது உழைத்தவர்கள், மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் போன்றோர் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் திறமையின் வெளிப்பாடாய் அமைந்த கண்கவர் கலை நிகழ்வுகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.



1 comment:

Powered by Blogger.