Header Ads



மியன்மாரில் மஹிந்த ராஜபக்ஸவும், மன்மோகன் சிங்கும் சந்திப்பு (படங்கள்)

மியன்மாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று 04-03-2014 சந்தித்து கலந்துரையாடினார். இரு நாடுகளின் தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையலான பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

மியன்மாரின் தலைநகரான நேபிடோவில் நடைபெற்றுவரும் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இடம்பெறுகிறது.

இக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த மியன்மாருக்கு விஜயம்மேற்கொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வங்காளம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபால், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளே இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.


No comments

Powered by Blogger.