அமைச்சர் அதாவுல்லாவுடன் சிராஸ் மீராசாஹிப் இணைவாரா..?
முஸ்லிம் கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் மாறி மாறி கட்சி மாறும் படலத்தின் தொடர்ச்சியாக கல்முனை பிரதி மேயரும் மு. கா. உயர்பீட உறுப்பினருமான சிராஸ் மீராசாஹிப் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் இன்னும் சில தினங்களில் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பகமாகத் தெரிய வருகின்றது. இது தொடர்பில் அமைச்சர் அதாவுல்லாவும் பிரதிமேயர் சிராஸ¤ம் பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
இதேவேளை தேசிய காங்கிரஸில் அங்கம் வகித்த கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எச். எம். எம். பாயிஸ் மு. கா.வில் அண்மையில் இணைந்து கொண்டார். அதே போன்று அ. இ. மு. கா. வில் அங்கம் வகித்த முன்னாள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி நிஜாமுதீன் மு. கா. வில் இணைந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்ட கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசியல் வாதிகளும் மு.காவி லுள்ள அரசியல்வாதிகளும் மாறிமாறி கட்சி தாவுவது தொடர்பில் ஆதரவா ளர்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப் படுகின்றது.
தாருஸ்ஸலாம் நிகழ்வொன்றில் மு. கா. தலைவர் ஹக்கீம் தனது உரையொன்றின் போது, சுயநலம் இல்லாத அரசியல் என்று 100 வீதம் இருக்க முடியாது.
குறைந்தளவு சுயநலம் 50 வீதம் சமூக நலன் 50 வீதம் என்றாவது ஒவ்வொருவருடத்திலும் காணப்பட வேண்டுமென நான் வழமையாக விநயமாக வேண்டிக் கொள்ளுவதுண்டு என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கை கொட்டி சிரிப்பார்கள்.. ஊரார் சிரிப்பார்கள்...
ReplyDeleteகழுதை...... குதிரையை.....நோக்கி...ஓடுகிறது.....
குதிரைக்கு...புரியவில்லை...இது கழுதை என்று... நிட்சயம் கழுதை கத்தும் பொது குதிரைக்கு புரிந்தது விடும்...
இப்பிரதேசத்தின் தாய் ஊரான முஸ்லிம் காங்கிரசின் ஆணிவேரான சாய்ந்தமருது மக்கள் இந்த கழுதைக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்பது திண்ணம்.
Oru therthalil thoalvi adainthavudan.meendum ethaavathu koorikkondo thirmpavum.enathu uyirilum melaana katchchitke vandu vitten.ini mouthu varaikkum.Muslim congressil irunthe maranippen. pettiyum kodukkavendi varum.inzah allah miha viraivil ethir parkkalaam.
ReplyDelete